போலீசுக்கு போகிறார் மீனாட்சி?

Must read

 

actres-meenakshi-attack-217x300

கொல்கத்தைவைச் சேர்ந்த பிங்க்கி, “கருப்புசாமி குத்தகைதாரர்” படத்தின் மூலம் மீனாட்சி என்ற பெயரில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்தவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை. ஆகவே சமீபத்தில் வெளியான “நானும் ரவுடிதான்” படத்தில் அயிட்டம் டான்ஸ் ஆடினார்.

இந்த நிலையில் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் ‘நேர்முகம்’ என்ற படத்தில் நடிக்கிறார். சென்னை பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது, உதவி இயக்குநர் சங்கர் என்பவரை மீனாட்சி அறைந்துவிட பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சக உதவி இயக்குநருடன் தான் பேசிக்கொண்டிருந்ததை, மீனாட்சியை கிண்டலடிப்பதாக நினைத்து அடித்துவிட்டார் என்கிறது சங்கர் தரப்பு. “அனுமதி இல்லாமல் என் கேரவேனுக்குள் சங்கர் நுழைந்தார். ஆகவே அடித்தேன்” என்கிறார் மீனாட்சி. இதற்கிடையே மீனாட்சியிடம், படக்குழுவினர் மன்னிப்பு கடிதம் வாங்கினர்.

“மன்னிப்பு கடிதம் தராவிட்டால் அங்கிருந்து வெளியே செல்ல முடியாது என்று மிரட்டப்பட்டதால் கடிதம் கொடுத்தேன்” என்றார் மீனாட்சி.

இப்போது அவர், காவல் நிலையத்தில் புகார் செய்யப்போவதாக தகவல் கிளம்பி, மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More articles

Latest article