ஏர் இந்தியா போயிங் 747
ஏர் இந்தியா போயிங் 747

பிர்மிங்காம்:
போதையில் விமானத்தின் உள்ளே சிறுநீர் கழித்த பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19ம் தேதி இந்தியாவில் இருந்து இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரத்துக்கு ஏர் இந்தியா டிரீம்லைனர் விமானம் சென்றது.
இதில் 39 வயதாகும் ஜினு ஆப்ரகாம் என்ற பயணி தனது 10 வயது மகனுடன் பயணம் செய்தார். விமானத்தில் அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கு ஏறியது. இதனால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செயல்பட தொடங்கினார்.
விமானம் தரையிறங்க 40 நிமிடங்கள் இருந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் விமானத்தின் தரை மற்றும் இருக்கையில் சிறுநீர் கழித்தார்.
இதனால் சக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த விமான சிப்பந்திகள் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவிலை. இதையடுத்து அவரை கை விலங்கிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆப்ரகாம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பிர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் நடந்தது. ‘தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை’ என்று ஆப்ரகாம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும் அவருக்கு ஆயிரம் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 500 டாலர் இழப்பீடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 டாலர் மற்றும் 185 டாலர் கட்டணத்தையும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.