டாக்டர் ருத்ரன்
டாக்டர் ருத்ரன்

சிம்பு, அனிருத் கூட்டணி பாடிய பீப் பாடல் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. இந்த நிலையில் சிம்வுக்கு பதிலடு தருவது  போல பெண்கள் சிலர் சேர்ந்து பாடிய பீப் பாடல் தற்போது சமூகவலைதளங்களில் உலவ ஆரம்பித்திருக்கிறது.

இது குறித்து மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“ஆபாசமான பீஇதுவும் ஒரு பீப் பாட்டு !!

இதைப் பற்றி என்ன நினைக்கிறேன்?

அறிவிருக்கா என கேட்க நினைக்கிறேன், இது நியாயமா, முறையா என இல்லா அறத்துடன் அலட்டுவோரை.

இங்கே வெட்டியான நேரத்தில் தான் இருக்கிறேன், இங்கே கூட அறிவில்லாத கேள்வி வரும் போது பொத்துக்கொண்டுதான் வருகிறது, நிஜமாய் ஒரு வேலை இருக்கும் போது கேட்டால் என் பதில் ‘அறிவிருக்கா’ என்று வராது, நான் சென்னைத் தமிழன், என் மொழி பரந்தது, பல பீப்கள் நிறைந்தது.

மன்னிப்புக் கேட்டுக் கதறுமளவு பேசியவர்கள் பாடியவர்கள் நடந்து கொண்டவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என போராட எத்தனை முறை இந்தச் சங்கம் வந்திருக்கிறது? எல்லா பத்திரிகையாளரும் அந்த ‘போராட்டத்தில்’ கலந்து கொள்ளப்போகிறார்களா?”  இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் டாக்டர் ருத்ரன்.