சாதிச் சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ் (community certificate ) என்பதாகும்.

சமுதாயத்தில் பின்தங்கிய  நிலைகளில்   இருப்பவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க இந்த சான்றிதழ் அவசியமாகிறது.

குறிப்பாக உயர் கல்வியில் சேரும்போதும், அரசு வேலை வாய்ப்பின்போதும் இந்த சான்றிதழ் அவசியம் தேவைப்படும். அதே போல சில அரசு திட்ட உதவிகள் பெறவோ, மதம் மாறும்போதோ சாதி சான்றிதழ் வாங்க வேண்டியிருக்கும்.

 

வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து அதோடு குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் சாதி சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்

இந்த சான்றிதழ்கள் இல்லை என்றாலும், மனுவை பூர்த்தி செய்து அளித்தால் போதும். அதிகாரி விசாரித்து சான்றிதழ் வழங்குவார். இதற்கு கூடுதலாக சில நாட்கள் ஆகும்.