1
ம.தி.மு.கவின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளராக சுமார் 15 வருடங்கள் பதவியில் இருந்தவர் ஜோயல். ம.தி.மு.க.வில் துடிப்புடன் செயல்பட்டு வந்தார். ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாருவது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார், இதற்காக வைகோவே ஆஜராகி வாதாடினார். ஜோயலை மிகவும் நெகிழ்வுடன் வாழ்த்தினார் வைகோ.  ஜோயலும் வைகோ மீது மிகுந்த பற்றுடன் இருந்தார். கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற மதிமுக விழாவில் வைகோவுக்கு பணமாலை அணிவித்தார்.
பிறகு திடீரென தி.மு.கவில் இணைந்தார் ஜோயல். தற்போது அவரது முகநூல் பக்கத்தில் வைகோவை கடுமையாக தாக்கி பதிவிட்டிருக்கிறார்.
 
2
“மதுவிலக்கு பற்றி மல்லையா பேசுவதும், புற்றுநோய் பரப்பும் நெல்லைய்யா பேசுவதும் ஒன்றுதான்” என்று குறிப்பிட்டு கீழே திமுக வண்ணமான கறுப்பு சிவப்பில் எஸ். ஜோயல் என்று பெரிதாக பதித்திருக்கிறார்.
“என்னதான் கட்சியைவிட்டு போய்விட்டாலும், 15 வருடங்கள் வைகோவுடன் நெருக்கமாக இருந்தவர்.. இந்த அளவுக்கு கடுமையாக எழுதலாமா” என்கிறார்கள் ம.தி.மு.க.வினர்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!