புற்றுநோய் தாக்குதலின் அறிகுறி விழிப்புணர்வு இருந்தால் உயிர் பிழைக்கலாம்
புற்றுநோய் தாக்குதலின் அறிகுறி விழிப்புணர்வு இருந்தால் உயிர் பிழைக்கலாம்

லண்டன்:
புற்றுநோய் தாக்குதலின் அறிகுறியை கண்டுபிடித்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய உயிர் கொல்லி நோயான புற்றுநோய் உலகத்தையே மிரட்டி வருகிறது. இங்கிலாந்தில் மட்டும் இது வரை 2.5 மில்லியன் பேரை இந்த நோய் கொன்றுள்ளது. மேலும் பலர் புற்றுநோய் சார்ந்த நோயுடன் வாழந்து கொண்டிருக்கின்றனர். புதிய சிகிச்சை முறை, அறிகுறி விழிப்புணர்வு பிரச்சாரம் போன்றவற்றால் புற்றுநோய் மூலம் இறப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவீத இறப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மரபணு மற்றும் சுற்றுசூழல் காரணமாக புற்றுநோய் ஏற்படுகிறது. தடுப்பு ஊசிகள், சுகாதார வாழ்க்கை முறை போன்றவற்றால் 30 சதவீதம் புற்றுநோய் பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் புற்றுநோய்:
இந்த நோய் தாக்குதல் காரணமாக ஆண்டுக்கு 44,500 பேர் பாதிக்கப்படுகின்றனர். 5 சதவீதம் மட்டுமே வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்கு 35 ஆயிரம் பேர் இறக்கின்றனர். தொடர் இருமல் இருந்தால அலட்சியம் செய்யக் கூடாது. திடீரென அசதி ஏற்படுதல், எடை குறைதல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறியாகும். இங்கிலாந்தில் மட்டும் 24 ஆயிரம் பேர் அறிகுறையை வைத்து ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்ததால், சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
குடல் புற்றுநோய்:
பெருங் குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் என பொதுவாக இதை அழைப்பதுண்டு. இங்கிலாந்தில் 20 பேருக்கு ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 41 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 16 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். உயிர்வாழ 57 சதவீதம் வாயப்பு உள்ளது. 57 சதவீத நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பு உள்ளது. அதி எடை, உடலுழைப்பு இல்லாதவர்கள், மது, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதர நோய்களுக்கு ஏற்படும் அறிகுறியே இதற்கும் ஏற்படுவதால், இதை ஆரம்ப நிலையில் கண்டறிவிதில் தவறு ஏற்பட்டுவிடும். மலத்தில் ரத்தம், அடிவயிற்றில் வலி வருவது குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். குடல் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு தொடர் வயிற்றுபோக்கு ஏற்படுவதும் இந்நோய்க்கு தொடர்பு கொண்டதாகும்.
மார்பக புற்றுநோய்
65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த நோய் அதிகம் ஏற்படும். இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் இந்த நோயின் தாக்குதல் வர வாய்ப்பு உள்ளது. இந்த நோய் வந்தால் 78 சதவீதம் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆண்டுதோறும் 11 ஆயிரம் பேர் இங்கிலாந்தில் இந்த நோயால் இறக்கின்றனர். 27 சதவீத நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மார்பில் ஏற்படும் அசாதாரண கட்டிகள் இந்த நோய்க்கான அறிகுறி என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் மார்பின் தோல், அளவு, வடிவம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம், அக்குள் வீக்கம் மற்றும் தொடர் வலி போன்றவையும் மார்பக புற்று நோய்க்கான அறிகுறியாகும். காம்பு பகுதி திடீரென சிவப்பது, அரிப்பு, நீர் சொட்டுவது போன்றவையும் இதற்கான அறிகுறி.
சிறுநீரக பை புற்றுநோய்:
சிறுநீரக பையின் கழுத்து பகுதியில் இந்த நோய் ஏற்படும். பொதுவாக இந்த நோய் ஆண்களுக்கு ஏற்படும். இந்த நோய்க்கு ஆரம்ப கட்டத்தில் எந்தவித அறிகுறியும் தென்படாது. நன்றாக வளர்ந்த பிறகு தான் இந்த நோய் வெளியில் தெரியும். சிறுநீரக வெளியேற்றம் உள்ளிட்ட அம்சங்களை பாதிக்கும். சிறுநீரகத்தில் ரத்தம், விறைப்பை செயலிண்மை போன்றவை அறிகுறிகளாகும். முதுகு தண்டுவடம் பாதிப்பு, கால் மற்றும் பாதம் உணர்விண்மை, சிறுநீரக பை செயலிழப்பு போன்றவையும் ஏற்படும்.
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.