ஆர்.கே. செல்வமணி
ஆர்.கே. செல்வமணி

டிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று சினிமாவை தீவிரமாகக் காதலிக்கும் பாபுகணேஷ், தனது மகனையும் திரைக்கடலில் இறக்கிவிட்டிருக்கிறார்.  மகன் ரிஷிகாந்த்தை ஹீரோவாக்கி, “காட்டுப்புறா” படத்தை எடுத்திருக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா தியாகராயர் க்ளப்பில் நடைபெற்றது. தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆடியோவை வெளியிட்டார். மேலும் பல து சிறப்பு அழைப்பாளர்கள் பேசினார்கள்.
அவர்களில் ஆர்.கே.செல்வமணி  பேச்சுதான் படு காரம்.. அவரது சினிமா மாதிரியே!
“இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். நான் படித்த காலத்தில்தான் அவரும் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தா  . நான் 20 வருடங்களுக்கு முன் ‘செம்பருத்தி’ எடுத்தபோது அவர் ‘கடல்புறா’ எடுத்தார். இப்போது ‘காட்டுப்புறா’ எடுத்திருக்கிறார். அப்போது கைக்குழந்தை, இருந்த அவரது மகன், இன்று  கதாநாயகனாகி இருக்கிறான். 8 பேக் வைத்திருக்கிறான்” என்று படத்தைப் பற்றி பேசியவர், அதற்கப்புறம் விளாசித்தள்ளிவிட்டார்.
“என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் ஒருமுறை என்னிடம் ‘என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..’  என்றாள்.
செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் நடிகர்கள் சரியாக ஆடாததைத்தான் அப்படி கிண்டலடித்தாள். யாரோ நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைத்துக்கொள்கிறார்கள்.  தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது.
ஆடியோ விழா
ஆடியோ விழா

நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள் .ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள்.இப்படி மானத்தை வாங்காதீர்கள்” என்று போட்டுத்தாக்கியவர், அதோடு விடவில்லை:
“முன்பு போல, குறிப்பிட்ட திரையரங்குகளில் தினசரி மூன்று  காட்சிகள் முறை மீண்டும் வர வேண்டும். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று ரசிகர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.
இப்போது சினிமா புரோக்கர்கள் கைகளுக்கு போய்விட்டடது. புரோக்கர்கள்தான் நம்மை ஆண்டு வருகிறார்கள். உற்பத்தி செய்பவர்கள் வாழ முடியவில்லை, விற்கிறவர்களும் வாழ முடியவில்லை. இது விவசாயத்தில் மட்டுமல்ல திரைத்துறைக்கும்  வந்து விட்டது” ஆதங்கமும் ஆவேசமுமாக பேசி முடித்தார் ஆர்.கே. செல்வமணி.