புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

Must read

 

Untitled-5

சினிபிட்ஸ்:

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த முதல்வர் ஜெயலலிதாவுடனான இந்த சந்திப்பில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர்  விஷால் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

தமிழகம் முழுதும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பல இடங்களில் உரிய நிரவாரணம் கிடைக்காமல் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் நடந்திருக்கும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பார்களோ என்கிற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது.

ஆனால், “மக்கள் பிரச்சினை எதிலும்  நடிகர் சங்கம் தலையிடாது” என்று சங்க  செயலாளர் விஷால் ஏற்கெனவே கூறியுள்ளதால், இது நடிகர் சங்க விவகாரம் மற்றும் நடிகர் சங்க கட்டிடம் குறித்தான சந்திப்பாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.  மேலும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலை வெற்றிகரமாக நடக்க உறுதுணையாக இருந்ததற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு  நடிகர்கள் நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

More articles

Latest article