பிறந்தநாள் + ஆடியோ ரிலீஸ்: சிம்பு மேடையேறுகிறார்! நயன் எஸ்கேப்!

Must read

 
download (4)
நாளை மறுநாள் ( பிப்ரவரி 3ம் தேதி ) சிம்பு பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிடிருக்கிறது அவரது குடும்பம்.  “பீப்” பாடல் சர்ச்சையில் சிக்கியதில் இருந்து, சிம்பு வெளியில் தலைகாட்டாமல் இருக்கிறார். அவரது அப்பாவும் அம்மாவும் கோர்ட், வழக்கறிஞர், கோயில், பரிகாரம் என்று சுற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், தள்ளிக்கொண்டே போன, “இது நம்ம ஆளு” படத்தின் ஆடியோ ரிலீஸை, சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதி (நாளை மறுநாள்) நடத்திவிட தீர்மானித்தார்  சிம்புவின் அப்பா, டி.ராஜேந்தர்.

குறளரசன்
குறளரசன்

இந்த படத்தை தயாரிப்பது அவர்தான். தவிர, படத்துக்கு இசை சிம்புவின் தம்பி குறளரசன்.  அதுவும், இந்த படத்தின் ஆடியோ உரிமையை புகழ் பெற்ற “லகரி”இசை நிறுவனம்  ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.  இந்த மகிழ்ச்சியோடு, நீண்ட இடைவேளைக்கு பிறகு, சிம்புவையும் மேடை ஏற்ற திட்டம் போட்டிருக்கிறார் டி.ஆர். படத்தில், சிம்புவின் ஜோடியாக நடிக்கும் நயன்தான், விழாவுக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாராம்.
 
போனது போகட்டும், இனி நல்லதே நடக்கட்டும்!
“பீப்” பாடல்கள் போடாமல், நல்ல பாடல்களா போட்டு பெயரும் புகழும் பெற குறளரசனுக்கு வாழ்த்துகள்! அதே வாழ்த்துகள்தான் சிம்புவுக்கும்!

More articles

Latest article