பிரபல நடிகை கல்பனா மறைவு

Must read

கல்பனா
கல்பனா

ஹைதராபாத்:
மிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்த கல்பனா இன்று  காலை ஹைதராபாத்தில் காலமானார். பிரபல நடிகை ஊர்வசியின் சகோதரி இவர்.  இவர்களது இன்னொரு சகோதரியான   கலாரஞ்சனியும் படங்களில் நடித்து வருகிறார்.
பாக்யராஜ் இயக்கி நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ரமேஷ் அரவிந்த் உடன் ‘சதிலீலாவதி’ படத்தில் நடித்திருந்தார்.
 
பாக்யராஜுடன் "சின்ன வீடு" படத்தில்..
பாக்யராஜுடன் “சின்ன வீடு” படத்தில்..

ஆரம்ப காலத்தில் சில படங்களில்  நாயகியாக நடித்துவந்த இவர், பிறகு அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மா வேடத்தில் கல்பனா நடித்திருந்தார்.
திரைப்பட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற கல்பனாவுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார்.
கல்பனாவின் திடீர் மறைவால் தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
51 வயதான கல்பனா, 300க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். கடைசியாக மலையாளத்தில் சார்லி என்ற படத்தில் நடித்திருந்தார். அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
“‘தனிச்சலா நிஜன்” என்ற மலையாள படத்தில் நடித்த கல்பனாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article