Rajini-to-shoot-in-airport
சென்னை:
ஊருக்கு செல்லும் அவசரத்தில் எதையாச்சும் மறந்து வைத்துவிட்டு, பின்னர் அறக்க பறக்க ஓடி வந்து எடுத்து செல்வது இயல்பான விஷயம் தான். ஆனால், தனக்கு உதவியாளர், மேலாளர் என பல அடுக்குகளை வைத்துள்ள ரஜினிக்கே இப்படி ஒரு அனுபவம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த நடித்துக் கொண்டிருக்கும் கபாலி திரைப்படம் மலேசியாவில் சூட்டிங் நடக்கிறது. இதற்காக மலேசியா செல்ல ரஜினி நேற்று காலை சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு வந்த பிறகு தான் பாஸ்போர்ட் எடுத்து வராதது ரஜினிக்கு தெரியவந்தது.
பாஸ்போர்ட் எடுத்து வர உதவியாளர்கள் மூலம் முயற்சிகள் நடந்தது. இதனால் அங்கு காத்திருந்த ரஜினியை சுற்றி ரசிகர்கள், பயணிகள் ரஜினியை பார்க்க ஆவலுடன் கூடிவிட்டனர். சிலர் அவர் ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து டுவிட்டர் பதிவிட்டனர். ‘‘ரஜினிக்கு பயண நேரத்தின் கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த நெருக்கடி அவரது திரைப்பட கிளைமாக்ஸ் காட்சி போல் இருந்தது’’ என அவருக்கு நெருக்கமானவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த இடைபட்ட நேரத்தில் பத்திரிக்கையாளர்களை ரஜினி சந்தித்து பேசினார். ‘‘ பத்மபூஷன் விருதுக்கு என்னை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. கபாலி பட சூட்டிங் முடிவும் தருவாயில் உள்ளது’’ என்றார்.
பாஸ்போர்ட் கொண்டு வந்து அவரிடம் கொடுக்கப்பட்ட பிறகு பிற்பகல் 11.47 மணிக்கு விமானம் மூலம் ரஜினி மலேசியா புறப்பட்டுச் சென்றார். அவர் மலேசியா ஏர்போர்ட்டில் நடந்து வரும் போட்டோவும் டுவிட்டர் பதிவேற்றம் செய்யப்பட்டது.