"பாபா"வாக தலைவாசல் விஜய்
“பாபா”வாக தலைவாசல் விஜய்

னிதனாக பிறந்து மகானாக வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா. அவரது வாழ்க்கையும் அற்புதங்களும், “ அபூர்வ மகான் “ என்ற  திரைப்டமாக வெளியாகிறது.

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ்  தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சாய்பாபாவாக தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார்.

அவருடன் சாய்முரளி,  ரஞ்சனி,  சுமன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ் என்று பலரும் நடித்திருக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தி நடிக்கிறார்.

தயாரிப்பாளர் செல்லத்துரை, “படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. இந்த படத்தை பார்த்த எம்.ஆர்.கிரியேசன்ஸ் ஜோதி முருகன், . “பாபா படத்தை ரிலீஸ் செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம்  நானே  ரிலீஸ் செய்வதாககிறேன்”  என்றார்.

படத்தை வெளியிட வேலைகளை தொடங்கி இந்த மாதம் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டோம் . அப்போது நண்பர் ஒருவர், “ நீங்கள் பாபா படத்தை ரிலீஸ் செய்யும் தேதி தான்  அவர் சமாதி அடைந்த நாள்” என்று கூறினார்.  எல்லாம் பாபாவின் அருள்” என்று மெய்சிலிர்த்துச் சொன்னார்.