பாண்டிராஜ் – குறளரசன் மோதல்

Must read

idu-namma-aalu

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “இது நம்ம ஆளு” படத்தின் பஞ்சாயத்து ஊரறிந்த விசயம்தான். இந்த படத்துக்கா நயன்தாராவையும், பாண்டிராஜையும் கடுமையாக விமர்சித்தார்கள் டி.ஆரும், சிம்புவும். நயன் மீது நடிகர் சங்கத்தில் புகாரும் கொடுத்தார்கள்.

இந்த நிலையில் சிம்புவின் தம்பி குறளரசனும் களத்தில் குதித்துவிட்டார்.

இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி நீ யாருன்னு எனக்கு தெரியும்,நான் யாருன்னு உனக்குதெரியும்,நாம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்.தூக்கம் வந்தா போயி தூங்கு போ. ஒரு நல்ல முதலாளிக்குஅழகு,உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் ஊதியம் கொடுப்பது.ஒரு வருடம் சென்றாவது கொடுக்கலாமே.

pandiraj-kuralarasan

 

விரைவில் ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்து கடந்த இரண்டரை வருடங்களாகஎவ்வளவு போராட்டத்தை சந்தித்து வருகிறோம் என கூற இருக்கிறேன்” என்று தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் சிம்புவின் தம்பி குறளரசனும் ட்விட்டியுள்ளார்.  “‘இது நம்ம ஆளு’ படத்தின் 1நிமிட டீஸரை மட்டுமே பார்த்திருக்கிறேன். எப்போது முழுமையான காட்சிகள் கிடைக்கும் என்று தெரியவில்லை.புதுமுக இசையமைப்பாளரான என்னை படத்தின் பின்னணி இசையை சில நாட்களில் முடிக்க சொல்கிறார்கள்.  ஐந்து பாடல்களை கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அதில், மூன்று பாடல்கள் மட்டுமே படமாக்கிஇருக்கிறார்கள். தயாரிப்பாளர் விரைவில் வெளியீட்டு தேதியை கூறுவார். தற்போது எனது அடுத்த ஆல்பத்தில்பணியாற்றி வருகிறேன். எனக்கு எனது அண்ணன் தான் எல்லாமே. அவர் ஒருவருக்காக மட்டுமே இதை செய்துவருகிறேன்.

நானும் எனது அப்பாவுடன் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறேன். எனது வாழ்நாளில் யாருமேஎன்னை இந்தளவுக்கு அசிங்கப்படுத்தியது இல்லை. ‘இது நம்ம ஆளு’ இயக்குநர் என்னிடம் இப்பாடல்கள் எல்லாம்நன்றாக இல்லை, யாருமே கேட்க மாட்டார்கள் என்று கூறினார். மக்கள் கேட்டுவிட்டு சொல்லட்டும். எனது அண்ணன்,அப்பா, இசையமைப்பாளர் தமன், யுவன் சார், அனிருத் உள்ளிட்டோர் எனக்கு ஆதரவு அளித்து, எனது இசையைபாராட்டி இருக்கிறார்கள்.” என்று  பதிலுக்கு தனது ஆத்திரத்தை கொட்டியிருக்கிறார் குறளரசன்.

சிம்பு படம்னாலே இப்படித்தான்.. படத்தை பற்றி வரும் செய்திகளை விட படத்தின் விலங்க விவகாரங்கள்தான் அதிகம் வரும்!

அப்படி ஒரு டிசைன், சிம்பு!

More articles

Latest article