பிரான்ஸ்

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் எல்லை மூடப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உணவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாகியால் கண்மூடித்தனமாக சுட்டார்கள். . இதில் அந்த உணவு விடுதியில் இருந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இதேபோல் பாரீஸில் உள்ள பட்லாக்கன் திரையரங்கிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கிருந்த பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால்பந்து விளையாட்டு மைதானத்திலும் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர் ஹோலண்டு பத்திரமாக மீட்கப்பட்டார். .

இந்த  தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆனாலும், தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே ட்விட்டர் தளத்தில் ஜிகாதிகள் தங்கள் மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளனர். மேலும், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக பிரான்ஸ் படைகள் தாக்குதல் நடத்தி வருவதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர், “இஸ்லாமியருக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் மற்ற நாடுகள் மீதும் “நடவடிக்கை” எடுக்க வேண்டும்” என்று கூறி அந்த நாட்டு பட்டியல்களையும் வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியாவையும் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்தது.

ஃபேஸ்புக் பக்கம் ..

பயங்கரவாதிகள் தாக்குதலில் தங்கள் உறவுகள், நட்புகள் பத்திரமாக இருக்கிறார்களா என்பது குறித்த தகவல்களை அறிய ஃபேஸ்புக் நிறுவனம். Paris Terror Attacks என்ற பக்கத்தை உருவாக்கியுள்ளது.

அதில் “Mark them safe if you know they’re OK” என்ற ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை பாரீஸ் மக்கள் பயன்படுத்தி உறவுகளுக்கு தங்களது நலனையும், தங்கள் உறவுகள் நலனையும் தெரியப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளது