நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி

Must read

nepalam1
நேபாளத்தில் நேற்று நடைபெற்ற பயங்கர பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
காத்மண்டு:
நேபாளத்தில் கோடாங் என்ற இடத்தில் இருந்து, காத்மாண்டு நகருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, மலைப் பகுதியில் உருண்டு 300 அடி பள்ளத்தில் சரிந்தது விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்து விபத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பேருந்தானது இரண்டு மரங்களுக்கு நடுவே சிக்கியதால், பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்தன.
காயமடைந்தவர்கள் காத்மண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்து உடனடியாக எவ்வித தகவலும் இல்லை. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More articles

Latest article