"நெட்" கதை: புத்திசாலி நாய்!

Must read

 
images-1
ரு திருடன் ஒரு வீட்டிற்கு திருடச் சென்றிருக்கிறான். அங்கு ஒரு நாய் இருந்திருக்கிறது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறது.  இவனுக்கு,  திருடச் செல்லலாமா  வேண்டாமா,  உள்ளே போனவுடன் நாய் குலைத்தால் என்ன செய்வது என்று கவலை. இப்போதே குலைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று எண்ணம்.
யோசித்தவன் முடிவாக பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான். அதைக்கண்டவுடன் நாய் திருடனை நோக்கி பாய்ந்தது.  இருவரும் கட்டிப்பிடித்து உருண்டிருக்கிறார்கள். அப்போது திருடன் நாயிடம் “ ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ இலவசமாக உனக்கு பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னிடம் சண்டை இடுகிறாய்”  என்று கேட்டிருக்கிறான்.
அதற்கு அந்த நாய் சொல்லி இருக்கிறது… “நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரி ந்தவராக இருக்குமோ என்று யோசனையாக இருந்தது. எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை வழங்கினாயோ அப்போது உறுதியாகி விட்டது நீ திருடன் என்று, அதனால்தான்” என்று சொன்னதாம்.
இலவசத்தை எதிர்பார்க்கும் மக்கள் யோசிக்க வேண்டிய விஷயம்!
பிரகாஷ் செய்யாறு
 
 
 

More articles

8 COMMENTS

Latest article