12728945_876335455797513_4373350229799874030_n
நூறாண்டை நெருங்கும் இராசிபுரம் ஸ்ரீலட்சுமிவிலாஸ் ஹோட்டல்..!
பழைய சேலம் மாவட்டம் ,இராசிபுரம் நகரில் 1926 ஆம் ஆண்டு திரு. வெங்கட்ராம அய்யர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு,திரு.சுப்ரமணிய அய்யர் பிரதர்ஸ்,தற்போது எமது இனிய நண்பர்கள்,அன்புச்சகோதர்கள் திரு எஸ்.பிரகாஷ்,எஸ்.முரளி ஆகியோர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாராம்பரிய பெருமைமிக்க ஹோட்டல் இராசிபுரம. ஸ்ரீலட்சுமிவிலாஸ்..! உயர்தர சைவ ஹோட்டல்..!
இராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ளது இந்த சூப்பர் ஹோட்டல்..!
இங்கு எல்லா டிபன் ,சாப்பாடு ,இனிப்பு,கார வகைகளுமே வீட்டுச்சுவை போல ருசியாக இருக்கும் என்றாலும் மூன்று அயிட்டங்கள் தமிழகமெங்கும் பிரபலம்..!
அவை முறையே நெய்பிளைன் தோசை,மைசூர் பாகு, பாதாம் அல்வா…!
நெய்பிளைன் தோசைக்கு இன்னொரு பெயர் நிலா தோசை..!
நிலா வடிவில் ,இராசிபுரம் நெய் ஊற்றி வார்க்கப்பட்டு சுடச்சுட கெட்டிச்சட்னி வைத்து பரிமாறப்பபடும் நெய் தோசைக்கு ரசிகர்கள் ஏராளம்..!
இங்கு டிபன் சாம்பார்,சாப்பாடு சாம்பார் என இரு சாம்பார்கள் உண்டு..!
டிபன் சாம்பார் சுவை வேறெங்கும் உணரமுடியாத தனிச்சுவை..!
தமிழ் கவிஞர் கி்.வா.ஜ அவர்கள் இந்த நெய் தோசையை உண்டு மகிழ்ந்து,ஒரு வெண்பாவே ” தோசைக்கு ஒரு ராசை..!” என்ற தலைப்பில் இயற்றி அது அந்த காலத்திலேயே குமுதம் பத்தரிக்கையில் வெளியாகி உள்ளது…!
தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி ,மறைந்த விகடன் ஆசிரியர் எஸ் .பாலசுப்ரமணியன் போன்ற எண்ணற்ற பெரியோர்கள் இந்த ஹோட்டல் ருசியை மனமார பாராட்டி உள்ளனர்..!
நெய்பிளைன் உருட்டினால் டயர் போல ஓடும் அளவுக்கு வட்ட வடிவில், ஏடு ஏடாக உரித்து சுவைக்கும்அளவுக்கு தயாரிக்கப்படுகிறது..!
கடை உரிமையாளர் பிரகாஷ் சார் கூறும் போது, எங்கள் ஒரு இட்லி கேட்டால் தருவோம்.ஒரு இட்லி யாருக்கு கேட்பார்கள்? குழந்தைக்கும்,முதியோருக்கும் தானே..! அவர்களுக்கு இல்லாமல் என்ன சார்? என்று கூறி மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்..!
டயட்டில் இருப்பவர்கள்,ருசிக்காக சாப்பிடுபவர்களுக்காக அனைத்து வெரைட்டிகளிலுமே மினி அயிட்டம் உண்டு..! மினி ஆணியன் ஊத்தப்பம்,மினி ரவா இப்படி..!
மைசூர்பாகு என்றால் இது தான் என்று சொல்லுமளவுக்கு ,அப்படி ஒரு தித்திப்புடன் அற்புத சுவை மைசூர்பாகு இங்கு கிடைக்கிறது..!
மற்றும் பாதாம் அல்வா,கோதுமை அல்வா இவைகளும் வெகு பிரபலம்..!
எங்கெங்கோ இருந்து வந்து வாங்கி செல்கின்றனர்..!
நாடி வரும் மக்களின் பசியை போக்குவதோடு,அவர்கள் ஆரோக்கியத்திலும் கவனம் கொண்டு சுகர்ஃப்ரீ பலகாரங்களும் விற்பனை செய்கின்றனர்..!
சுத்தம்,சுகாதாரம் உள்ள ஹோட்டல் இது …!
சாப்பாட்டில் பதமாக வடிக்கப்பட்ட சாதம், பொடிக்கு நல்லெண்ணை , கூட்டு,பொரியல்,சாம்பார்,ரசம், தயிர்,அப்பளம் என அனைத்துமே அறுசுவை…!
தலைமுறைகளை தாண்டி தழைத்து நின்று மக்களின் நன்மதிப்பை பெற்று தமிழகமெங்கும் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஸ்ரீலட்சுமிவிலாஸ் ஹோட்டல் ,இராசிபுரம் நெய் போல் இராசிபுரத்துக்கு பெருமை சேர்க்கிறது என்பதே உண்மை..!
சேலத்துக்கும் ,இராசிபுரத்துக்கும் ஒரு பெரிய தொடர்பே இந்த ஹோட்டல் மூலம் ஏற்பட்டு நாளுக்கு நாள் பெருகி வருகிறது…!
இராசிபுரம் ஸ்ரீலட்சுமி விலாஸ் ஹோட்டல் துறையில் மேன்மேலும் சிறந்து விளங்க மனமார வாழ்த்துகிறோம்…!
எங்கள் பல்லாண்டு கால இனிய நண்பர் திரு பிரகாஷ் சார் அவருக்கும்,அவரது தம்பி முரளி சாருக்கும் இதயங்கனிந்த பாராட்டுக்கள்…!
Esan D Ezhil Vizhiyan