அட… என்னத்துக்குங்க இட ஒதுக்கீடெல்லாம்…. எல்லாருஞ்சமந்தான…..?

//”தாழ்த்தப்பட்டவங்க வீட்ல இருந்து உங்க மகனுக்கு பெண் எடுபீங்களா ? — அதெல்லாம் முடியாதுங்க அவங்க “எங்கள விட” கீழ் ஜாதில்ல…!

தாழ்த்தப்பட்டவங்க வீட்ல உங்க பெண்ணை குடுப்பீங்களா?
— ஐயையோ அதெல்லாம் முடியாது அவங்க “எங்கள விட” கீழ் ஜாதி…

தாழ்த்தப்பட்டவங்கள கோவிலுக்கு உள்ளே விடுவீங்களா?
—அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில்ல…

தாழ்த்தப்பட்டவங்கள உங்க வீட்டுக்கு உள்ளே விடுவீங்களா?
–அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில்ல…

தாழ்த்தப்பட்டவங்கள ஊருக்குள்ள உங்களோட ஒண்னா சமமா வாழ விடுவீங்களா?
— அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில்ல அவங்க ஊருக்கு ஒதுக்குப்புறமா சேரிலதான் வாழனும்.

சரிங்க கடைசியா ஒன்று தாழ்த்தப்பட்டவங்கள செத்த பிறகு உங்களோட இடுகாடுலயே புதைக்க / எரிக்க விடுவீங்களா?
— ஐயையோ அதெல்லாம் முடியவே முடியாது. அவங்க “எங்கள விட” கீழ் ஜாதி அவங்க தனி இடுகாட்டுல தான் புதைக்கணும்.

தாழ்த்தப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி என்ன நினைகிறீங்க?
— அது எப்படிங்க நியாயம் அவங்களுக்கு மட்டும் சலுகைகளா? எல்லாருக்கும் சமமாத்தான் இருக்கனும், இப்படிப் பிரிக்க கூடாது.

செத்த பிறகு கூட எங்கள சமமா நினைக்க மாட்டாங்களாம் ஆனா இடஒதுக்கீடுக்கு எதிராகப் பக்கம் பக்கமா சமத்துவம் பேசுவாங்கலாம். போங்கடா நீங்களும் உங்க சமத்துவமும்.”//

முகநூல் பக்கம் :https://www.facebook.com/ilangovan.balakrishnan.1/posts/10207667438429147