art1

உலகின் பாரம்பரிய கலைகளில் ஒன்று தஞ்சாவூர் பாணி ஓவியங்கள். இவை  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை!

கண்ணையும் கருத்தையும் பறிக்கும் அந்த ஓவியங்கள் பற்றி அறிந்துகொள்ள ஓவியர் என். மாதவன் அவர்களை தொடர்புகொண்டோம்.

art2

இந்தத் துறையில் இருபது வருட அனுபவம் கொண்ட மாதவன், மத்திய அரசின் கைவினைஞர் வாரியம் அங்கீகரித்தவர்களில் ஒருவர். இவரது பல்லவா ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் நிறுவனத்தின்   ஓவியங்களுக்கு  உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆம்.. உலகின் பல பகுதிகளில் வசிப்பவர்களின் இல்லங்களை இவரது ஓவியங்கள் அலங்கரிக்கன்றன!

art3

அவரிடம் பேசியது, ஒரு நீண்ட சுவையான வரலாற்றை கேட்பது போல இருந்தது.

இதோ அவரே பேசுகிறார்:

“சோழ மன்னர்கள் காலத்தில் உருவான இந்த தஞ்சாவூர் பாணி ஓயவியங்களை அடுத்தடுத்து வந்த மன்னர்களும் ஆதரித்தார்கள். இந்த மன்னர்களின் அரண்மனைகளை தஞ்சாவூர் ஓவியங்கள் அலங்கரித்தன.

art4

இன்றும்  கலை ஆர்வமிக்கவர்களின் இல்லங்களை அலங்கரிக்கும் தஞ்சாவூர் ஓவியங்கள், நாம் வசிக்கும் வீட்டுக்கு தனி அந்தஸ்தை ஏற்படுத்தித் தருகிறது என்றால் மிகையில்லை.

முன்பெல்லாம் ‘வெண்ணை உண்ணும் கிருஷ்ணன் , ‘ஆலிலைமேல்குழந்தை கிருஷ்ணன்’, ‘இராமர் பட்டாபிசேகம்’, ‘தேவியர் உருவங்கள்’என்பதான  ஓவியங்கள் திரும்பத் திரும்பப் படைக்கப்பட்டன.  ஆனால் இப்போது பல்வேறு கடவுளர் உருவங்கள் உருவாக்கப்படுகின்றன.

art5

முன்பு பெரிய அளவில் மட்டுமே வரைவார்கள். இப்போது மிகச் சிறிய அளவிலும் தஞ்சாவூர் ஓவியங்கள் செய்யப்படுகின்றன.

இந்த வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்ட மரத்தில் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும்.  இந்த சட்டமும்கூட ஓவியத்தின் ஒரு பகுதிதான்.  அந்த அளவுக்கு கவனத்துடனும், கலை நேர்த்தியுடனும் சட்டங்களை உருவாக்குவோம்.

art6

வரையப்படும் உருவங்கள் உருவ அளவில்  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும்.  கடவுளின் உருவம் பெரிய அளவில் கித்தானின் (கேன்வாஸ்) பெரும்பகுதியை நிறைத்திருக்கும்.  மற்ற உருவங்கள் ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் வரிசையிலோ, அல்லதுஒழுங்குடன்  கூடிய  குழுவாகவோ அமைந்திருக்கும்.

art7

 

உருவங்களும் உருண்டு திரண்ட பருமனான உடல் கொண்டபடியாகவேபடைக்கப்படும்.

அவற்றில் முரட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு நளினம்கூடியதாக காணப்படும்.

இந்த ஓவியங்களின் பின்புல வண்ணம் கரும்பச்சை, அடர் நீலம், ஒளிர்சிவப்பு ஆகிய வண்ணங்களில் இருக்கும். நீலம், மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை வண்ணங்களில் மைய உருவங்கள் தீட்டப்படும். வண்ணங்கள் திடமான கலவையாகத் தீட்டப்படும்.

art8

உருவக்கோடுகள் வண்ணங்களுக்கான எல்லையை முடிவு செய்யும். உருவம் எப்போதும் ஒரு மாளிகையின் உட்புறத்தையோ,  அல்லது கோயிலின் உள்சுற்றையோபின்புலனாகக்  கொண்டிருக்கும்.

பின்புலன் எவ்விதக் கட்டிட அமைப்பும் இருக்காது.

ஆனாலும் மேற்கவிகை,திரைச்சீலைகள் போன்றவை அதை உணர்த்தும் விதத்தில்  இடம்பெற்றிருக்கும். திடமான அழுத்தமான  கோடுகள் ஓவியத்தை அமைக்கும். இந்த ஓவியங்கள் இருண்ட அறையில் ஒளி வீசக்கூடியவை.

art9

பெரும்பாலும் மா அல்லது பலா பலகைகளில் தான் வரையப்படுகின்றன.  ஆனால் நான் தேக்கு மரத்தையே பயன்படுத்துகிறேன்.  அதே போல ஜெய்ப்பூரில் இருந்து செமி ப்ரீசியஸ் ஸ்டோன் வாங்கி வந்து உபயோகப்படுத்துகிறேன். அதோடு ஒரிஜினல் தங்கத்தகடுகளையே நாங்கள் பயன்படுத்துகிறோம்.   ஒரு ஓவியம் செய்து முடிக்க ஒருவார காலம் ஆகும்.

பாரம்பரியமான ப்ளாட் முறையில் செய்வதோடு, எம்போசிங் முறையிலும் ஓவியங்கள் செய்கிறேன்.  அது சிலை போலவே இருக்கும். இதற்கு அமெரிக்கன் டைமண்ட் பயன்படுத்துகிறேன்.

இன்றும்கூட ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிங்கப்பூர் அமெரிக்கா மலேசியா என்ற உலகம் முழுதும் இருந்து என்க்கு ஆர்டர் வந்துகொண்டிருக்கின்றன.

அரசர் காலத்தில் அரண்மனையை அலங்கரித்த தஞ்சாவூர் ஓவியங்கள் இன்று உலகம் முழுதும் கோலோச்சுவது மகிழ்ச்சி அளிக்கிறது!”

art10

–     அவர் சொல்லி முடித்ததும், ஆகா அழகான தஞ்சாவூர் ஓவியத்துக்குள் இத்தனை அழகான விசயங்கள் இருக்கின்றனவா, அவசியம் வாங்க வேண்டும்  என்று தோன்றியது நமக்கு.

உங்களுக்கும் தஞ்சாவூர் ஓவியங்கள் வாங்கி வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுகிறதா…?

madhavanஓவியர் மாதவன் அவர்களின் தொலைபேசி:044 – 24469526, (சென்னை, இந்தியா)

 

-சந்திப்பு: அருள்மொழி