நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மறைவு

Must read

Tamil_News_large_1374782

மதுரை: நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் இன்று மறைந்தார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த .பொன்னம்மாள் கடந்த மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  கடந்த சில வாரங்களுக்கு முன் வீடு திரும்பிய அவருக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, வத்தலகுண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ( ஞாயிற்றுக்கிழமை)  இரவு, மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மறைந்தார்.

More articles

Latest article