நிஜமாகவே ஆண்டவனுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா?

Must read

26-1456483975-sasikala-temple-2121-600
ஸ்ரீரங்கம்:
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தனது அண்ணன் மகள் பிரபாவதியுடன் இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் அதிமுகவின் வெற்றிக்காக அர்ச்சனை  செய்தார்.
இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சித் தலைவர்கள் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் இதர பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தலைவர்களுக்கு நெருங்கியவர்கள் கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, கடந்த சில மாதங்களக கோயில் கோயிலாக சென்று வழிபட்டு வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட சசிகலா, இந்த மாத ஆரம்பத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். பிறகு பழனி முருகன் கோயில்  உள்ளிட்ட சில ஆலயங்களுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சசிகலா வந்தார். கருடாழ்வார், தன்வந்திரி, ராமானுஜர், தாயார் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு பேட்டரி கார் மூலம் சென்று தரிசனம் செய்தார். சசிகலாவுடன் அவரது அண்ணன் மகள் பிரபாவதியும் வந்திருந்தார்.  பிறகு ஸ்ரீரங்கம் ஜீயரை சந்தித்து இருவரும் ஆசி பெற்றார்கள்.
அடுத்ததாக சமயபுரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த சசிகலா, திருச்சி சங்கம் ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசிக்க புறப்பட்டுச் சென்றார்.
“ஆண்டவனுடனும், மக்களுடனும்தான் கூட்டணி” என்று சொல்லிக்கொள்ளும் தே.மு.தி.க. தலைவர் விஜகாந்த் கூட்டணி பேரங்களை ரகசியமாக நடத்திவருகிறார். ஆனால் உண்மையில் ஆண்டனுடன் கூட்டணி வைத்திருப்பவர்  ஜெயலலிதாதான் போலும்!
 

More articles

Latest article