நாம் தமிழரிலும் விலகல்!

Must read

o

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான, தமிழன் டிவி அதிபர் கலைக்கோட்டுதயம் இன்று அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 17ம் தேதிகூட, “நம்முடைய முப்பாட்டன் முருகனின் அண்ணன் இல்லை பிள்ளையார் வடநாட்டில் எங்கும் முருகன் இல்லை தென்நாட்டில் மட்டும் நம்மை ஏமாற்ற முருகனின் அண்ணன் பிள்ளையார் என்கிறார்கள்”   என்று நாம் தமிழர் கொள்கைப்படி, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் கலைக்கோட்டுதயம்.

இதற்கிடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இன்று தனது முகநூல் பக்கத்தில், “கலைக்கோட்டுதயமாகிய நான் கடந்த நான்கு வருடமாக நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக செயல் பட்டு வந்தேன் இனி மேல் அதிலிருந்து முழுமையாக விலகுகிறேன்” என்று அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே இவர் சிறிது காலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

More articles

Latest article