0
 
நாடார் இனத்தைஇழிவு படுத்தியதாக  திராவிடர்  கழக தலைவர் கி. வீரமணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ந்தேதி திருச்சியில் நடைபெற்ற திராவிட கழகம் மாநாட்டில் அதன் தலைவர் கீ.வீரமணி  கலந்துகொண்டு பேசினார். அப்போது நாடார் சமுதாயம பற்றியும், அச்சமுதாய பெண்கள் பற்றி இழிவாக பேசியதாக நாடார் இளைஞர் பேரவை அமைப்பினர் புகார் கூறினர். மேலும்,  அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அதோடு,  கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்தில் நாடார் இளைஞர் பேரவை அமைப்பினர்  கி.வீரமணி மீது புகார் அளித்தனர்.