z
சென்னை:
.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நீக்கியிருக்கிறார்.
புதிய தலைமுறை டிவியில் குணசேகரன் நெறிப்படுத்திய ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், நாஞ்சில் சம்பத் பேட்டி அளித்தார். அதே போல தந்தி டிவியில் ரங்கராஜ் பாண்டே நெறிப்படுத்திய நிகழ்ச்சியிலும் பதில் அளித்தார்.
இந்த பேட்டிகளில் நாஞ்சில் சம்பத்  பேசியதை கேட்டவர்கள், “இவர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசுகிறாரா, அல்லது எதிராக பேசுகிறாரா” என்று குழம்பிப்போனார்கள்.
“கொடுக்காத பேட்டிக்கே நடராஜன் ஐ.பி.எஸ்.ஸின் பதவி பறிபோய் திரும்ப வந்தது. இப்படி பேசுகிறாரே நாஞ்சில் சம்பத்..” என்ற எண்ணம் அந்த பேட்டியை பார்த்த அனைவருக்கும் ஏற்பட்டது.
நாஞ்சில் சம்பத் பேசியதில் இருந்து சில துளிகள்..
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரை கூட முதல்வர் பார்க்கவில்லையே என்று கேட்கப்படது. அதற்கு “அம்மாவால் முடியவில்லை. அதனால் வெள்ளம் பாதித்த மக்களை அவர் சந்திக்கவில்லை” என்று அதிரடியாக கூறினார் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா உடலமின்றி இருக்கிறார் என்று கூறிய கட்சி தலைவர்கள் மற்றும், ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரே, ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னது அதிர்ச்சி அளித்தது.
 

நீக்கி உத்தரவிட்ட ஜெ. அறிக்கை
நீக்கி உத்தரவிட்ட ஜெ. அறிக்கை

“ வெள்ளத்தால் மக்கள் அவதியுறும் நிலையில், அதிமுக பொதுக்குழுவை ஆடம்பரமாக நடத்தியது தேவைதானா?” என்ற அவசியமா என்ற கேள்விக்கு “மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டார்கள். சிலர் மெதுவாகத்தான் மீண்டு வருவார்கள். . அதற்காக, நாங்கள் ஆடம்பரத்தை குறைக்க முடியாது. ஒரு வீட்டில் துக்கம் நடந்துவிட்டது என்பதற்காக அடுத்த வீட்டில் கல்யாணம் நடத்தக்கூடாதா?” என்று கிண்டலாக கேட்டார் நாஞ்சிலார்.
“கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கண்ணுக்கு எட்டியதூரம்வரை எதிரிகளே இல்லை என்ற ஜெயலலிதா இப்போது கூட்டணி பற்றி பேசுவது ஏன்” என்ற கேள்விக்கு “கண்ணுக்கு தெரியாமல் இருந்த அதிமுகவின் எதிரிகள், “ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்தால் முன்னேறி வந்துவிட்டார்கள். ஊடகங்கள் திமுகவுக்கு விளக்கு போட்டு முன்னேற்றம் காண வைத்துள்ளன” என்று ஸ்டாலின் பயணத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம் தொணிக்கும் வகையில் பதில் அளித்தார்.
இப்படி, பேட்டி பார்த்தவர்கள், “சொந்த கட்சிக்கு எதிராகவே இப்படி பேசுகிறாரே…” என்று ஆச்சரியப்பட்டனர். இதே கருத்தை, சமூக இணையதளங்களிலும் பலர் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியின் விவரம், அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உடனடியாக, நாஞ்சில் சம்பத் வகித்த கொள்கை பரப்பு செயலாளர் பதவியை பறித்து உத்தரவிட்டுள்ளார்.
“என்ன நினைத்து நாஞ்சில் சம்பத் இப்படி பேசினார்? தனது சிறப்பான பேச்சினாலேயே புகழ் பெற்றவர், தனது பேச்சினாலேயே வீழ்ந்துவிட்டாரே!” என்று அவரது நலம் விரும்பிகள் .
.