sasi
எப்படியும் ஆட்சியை தக்க வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறார் சசிகலா. ஆட்சி்யை தக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவை விடவும் சசிகலாதான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவர்தானே பின்னால் இருந்து ஆட்சி செய்கிறார். அதனால் இதிலொன்றும் வியப்பில்லை.
தமிழகத்தின் சக்தி்மிக்க கோவில்களை பட்டியல் போட்டு பூஜை செய்து வரும் சசிகலா, இன்று(20.3.2016) குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சென்றார். ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி பக்தர்கள் அதிகம்பேர் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது வழக்கம். தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறப்பது வழக்கம். வழக்கம்போல இன்று கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.55 மணிக்கு சசிகலா சாமி தரிசனம் செய்வதற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து கோவில் ஊழியர்கள் கோவிலுக்குள் அழைத்துச்சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து 5.15 மணிக்கு கோவிலில் இருந்து வெளியே சென்றார். அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பிறகு அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்றதாக தெரிவிக்கின்றனர்.