நத்தம் ஆதரவாளர்கள் 3 பேர் நீக்கம்: ஜெ., அதிரடி
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் 3 பேரை இதுவரை வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
’’திண்டுக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.தர்மலிங்கம்,
சாணார்பட்டி ஒன்றிய ஜெ.ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மணி என்கிற கே.சுப்பிரமணி,
நத்தம் சட்டமன்ற தொகுதி கழக பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் மேட்டுக்கடை எஸ்.செல்வராஜ் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.