நட்பு..!!!

Must read

 

natpu

ஒவ்வொறுவர் வாழ்விலும்

நட்பு எனும் உறவு

நன்மையும் தீமையும்

செய்கிறது….!

பள்ளி…கல்லூரி நட்பு

விளையாட்டு…சந்தோசம்

என்று செல்லும்….!

சிறந்த நட்பு …ஆயுள் முழுவதும்

நீடிக்கும்….!

அலுவலக நட்பு…..

சற்று கடினமானது…..

ஆராய்ந்து அறிய வேண்டியது….!

வார்த்தைகள்…விஷயங்கள்

பேசும் போது….என்ன சொல்கிறோம்..

என்பதில் கவனம் தேவை….!!

எல்லோரிடமும் நல் நட்பு

பாராட்ட வேண்டும்…!

ஆனால்….

நெருக்கமான நண்பர்களை

பலநாள் பழகிய பிறகு தான்

அறிய முடியும்..!!

ஆண்..பெண் நட்பு….எல்லைக்கோடு

அவசியம்….

தாண்டினால் விளைவுகள் வாழ்க்கையை

பாதிக்கும்….

பேசும் பேச்சு….பழகும் முறை….

கவனமாய் இருந்து…

உள்நோக்கம் புரிந்து…

விலகிவிடுவது நன்று…!!

வாழ்க்கையில்….உணர்ச்சிகள்

எப்போதும் …நம் மனசாட்சியை

மீறாமல் பார்த்துக்கொண்டால்

நட்பு வாழ்க்கையில் ஓர் அங்கம்….!

இல்லையேல் ..

வாழ்க்கைக்கே பங்கம்…!

-முத்துகுமார்

More articles

Latest article