1 வேஸ்டி ராஜ்கிரன்
நேற்று சர்வதேச வேட்டி தினம். சமூகவலைதங்களில் ஆளாளுக்கு வேட்டி கட்டி படம் போட்டு அசத்திட்டாங்க.  ஆனால் வேட்டி என்றதும் நினைவுகூறப்படவேண்டியவர் நடிகர் ராஜ்கிரன்தான். ராமராஜனும் வேட்டி ஸ்பெஷல்தான் என்றாலும், ராஜ்கிரண், கூடுதல் ஸ்பெஷல். காரணம் இவர் அளித்த ஒரு பேட்டி!
3 வேஸ்டி நடிகர்கள்.
படங்களில் நடித்து கோடி கோடியாக குவித்தாலும், விளம்பரப்படம், வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள், கடைகள் திறப்பு என்று ஒன்றையும் விடாமல் கல்லா கட்டுபவர்கள் திரைப்பட நட்சத்திரங்கள்.  ஆனால், வேட்டி தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஒன்றரை கோடி ரூபாய் வரை தருவதாகச் சொல்லியும், அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் ராஜ்கிரண்.
இது குறித்து அப்போது அவர் பேட்டியில் கூறியது மறக்க முடியாதது:
“நான் எப்பவும் வேட்டியிலயே  இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக்
கூப்பிட்டாங்க. மறுத்தேன். ‘மற்ற நடிகர்களுக்கு  ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம்  கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு  கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன்.
அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம்,  50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு.
மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து  மிரட்டுற தொனியில் ‘ஒன்றரைக் கோடி  தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

‘நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும்.  இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க
முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க.  அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க.
‘வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா,
அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க  மாட்டேன்’னு சொன்னேன். பதில்
சொல்லாமப் போயிட்டாங்க!”
“தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுப்போம்” என்று நிஜத்திலும் நடிக்கும் நடிகர்களிடையே, நடிக்காத நடிகர் ராஜ்கிரன், கிரேட்தான்!