வித்யாபாலன்
வித்யாபாலன்

சென்னை:

மிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு விதித்த சுப்ரீம் கோர்ட் தடையை நீக்க கூடாது என்று கருத்து கூறிய நடிகை வித்யா பாலன், விராட் கோலி கூறியதை கண்டித்து அவர்களது உருவபொம்மையை எரிக்கப்போவதாக த.மு.ப. என்ற அமைப்பின் தலைவர் வீரலட்சுமி அறிவித்துள்ளார்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும், நடிகை வித்யாபாலனும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது என்று கூறினர்.

இந்த நிலையில், தமிழர் முன்னேற்றபடை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் கி.வீரலட்சுமி என்பவர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.

மாட்டுடன் வீரலட்சுமி
மாட்டுடன் வீரலட்சுமி

அவர் தனது முகநூல் பக்கத்தில் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாகவது:

“ஜல்லிக்கட்டு என்பது தமிழரின் பண்பாடு. அதற்கு எதிராக பேசிய கிரிக்கெட் வீரர் வீராட்கோலியையும், நடிகை வித்யாபாலனையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் 21ம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் அலுவலகத்தை தமிழர் முன்னேற்ற படை முற்றுகையிடும். அப்போது இந்த இருவரின் உருவபொம்மையை எரிபபோம்” என்று வீரலட்சுமி

ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

. மேலும், “தொடர்ந்து தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளில் வட இந்திய நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மூக்கை நுழைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த போக்கு தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் தனது முகநூல் பக்கத்தில், ஜல்லிக்கட்டு மாட்டுடன் இருக்கும் புகைப்படத்தையும வெளியிட்டுள்ளார்.

.