மைக்ரோ மேக்ஸ் நிறுவனருடன் நடிகை அசின் திருமணம்

Must read

asin
சென்னை: நடிகை அசினுக்கும் மைக்ரோ மேக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கு திருமணம் நடந்தது.
டெல்லியில் உள்ள துசித் தேவரானா ஓட்டலில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இதில் கலந்து கொண்டார். இவருடன் ‘கில்லாடி 786’ மற்றும் ‘ஹவுஸ்புல் 2’ ஆகிய திரைப்படங்களில் அசின் நடித்துள்ளார். இவருக்கு தான் முதல் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தை முன்னிட்டு வெளிநபர்கள் யாரையும் ஓட்டல் நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. தென் தமிழக திரையுலகத்தில் மிகவும் பிரபலமான அசின், அமீர்கானுடன் கஜினி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் நல்ல அறிமுகம் கிடைத்தது.
 

More articles

Latest article