நடிகர் விஷால் தாக்கப்பட்டார்

நடிகர் விஷால் கம்பியால் தாக்கப்பட்டு காயம்

நடிகர் சங்க தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து கொண்டு இருந்த நிலையில் தீடீரென நடிகர் விஷால் தாக்கப்பட்டார்.  அவரது கையில்காயம் ஏற்பட்டது.

இது குறித்து பேசிய நடிகர் வடிவேலு, “ஓட்டுப்போட வந்த நடிகை சங்கீதாவை சரத்குமார் ஆபாசமாக திட்டியிருக்கிறார். இதை விஷா தட்டி கேட்டதை அடுத்து, சரத் உடன் இருந்த ரவுடி ஒருவர் விஷாலை தாக்கியிருக்கிறார். உடன் இன்னும் இருவர் சேர்ந்து தாக்கியிருக்கிறார்கள்.    தாக்குதலில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் யாராக இருந்தாலும் போலீஸ் நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ள வேண்டும்” என்று வடிவேலு கூறினார்.

 

வாக்குச்சாவடி
வாக்குச்சாவடி

நடிகை ரஞ்சிதாவை சரத்குமார் தள்ளிவிட்டதாக விஷால் அணியினர் புகார் கூறினர். இதையடுத்து விஷாலை சரத் அணியைச் சேர்ந்த சிலர் தாக்கினர். அதில் ஒருவர் விஷாலை கம்பியால் தாக்கியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

பிறகு பேசிய விஷால், “நடிகரே இல்லாதவர்கள், வாக்குச்சாவடிக்குள் ஓட்டுபோட என்று வந்திருக்கிறார்கள் அவர்கள்தான் என்னை தாக்கினர்” என்றார்.

“பொதுவில் விஷால் அணியினர் வெற்றி பெறுவார்கள் என்ற தோற்றம் இருந்தாலும், பெரும்பாலான நாடக நடிகர்கள் சரத் – ராதாரவி பக்கமே இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற மோதல்களில் சரத் மற்றும் அவரது அணியினர் ஈடுபடுவது அவர்களுக்கான ஆதரவைக் குறைத்துவிடும்” என்று நாடக நடிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.