IN01_NATRAJ_1821126f

தமிழக முன்னாள் டிஜிபியை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, முதல்வரும் அக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர், சிறைத்துறை, தீயணைப்புத் துறை டிஜிபி என பல பொறுப்புகள் வகித்தவர் நட்ராஜ்.

கொஞ்ச காலத்திற்கு முன் ஜெயாவின் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைந்தார். இன்று காலை தந்தி டீவியில் அச்சு அ(ல)சல் நிகழ்ச்சியில் அவர் சொன்னதாக சில செய்திகள் கூறப்பட்டன.

அதாவது, “தமிழகத்தில் அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.

■ கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிடத்தான் தலைமை செயலர் இருக்கிறார். ஆனால் புதிதாக அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் வந்து, அவர் எல்லா தேவைக்கும் முதல்வர் உத்தரவிற்கு காத்திருந்ததுதான் சமீபத்திய வெள்ள சேதம் அதிகரித்ததற்கு காரணம்.

■ முன்பெல்லாம் அணையை பொதுப் பணிதுறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள். இப்பொழுது ”மான்புமிகு தமிழகமுதல்வர் புரட்சிதலைவி அம்மாவின் ஆணைகினங்க”ன்னு யார் யாரோ திறக்கிறார்கள்.

■ மொத்தத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படாததே வெள்ல சேதத்துக்குக் காரணம்.”

– இப்படி நடராஜ் ஐ.பி.எஸ். கூறியதாக அவரது புகைப்படமும் ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்தே நட்ராஜ் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பல தரப்பினரிடம் இருந்தும், “உண்மையை வெளிப்படையாக பயப்படாமல் கூறியதாக” நட்ராஜூக்கு பாராட்டுக்களும் குவிந்தன.

ஆனால் இப்போது, “இந்து பத்திரிகையின் மூத்த நிருபர் நட்ராஜ் சொன்ன கருத்தை, ஐ.பி.எஸ். நடராஜ் படத்துடன் ஒளிபரப்பிவிட்டது தந்தி டிவி. இதை விசாரித்து அறியாமல் ஐ.பி.எஸ். நடராஜை  ஜெயலலிதா நீக்கிவிட்டார்” என்ற தகவல் வெளியாகி உள்ளது.

“நிர்வாகத் திரமை மிக்கவர்” என்று சிலரால் பூஸ்ட் செய்யப்படும் ஜெயலலிதாவுக்கு இதுபோல்  குழப்பங்கள் ஏற்படுவது வழக்கம்தான்.

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு அடுத்த நாளே மாற்றுவார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரிய கூத்தும் நடந்தது. கூட்டணி கட்சிகளை கலந்தாலோசிக்காமல் தனது கட்சி வேட்பாளர் பட்டியலையே அறிவித்தார். பிறகு தனக்குத் தெரியாமல் பட்டியல் வெளியாகிவிட்டது என்றார்.

எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.க்களும் எம்.பிக்களும் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டார்கள்’ என்றும் கூறினார்.

 

(சசிகலா) நடராஜன்
(சசிகலா) நடராஜன்

 

“போனது போகட்டும், நடராஜ் பேட்டி அளித்தார் என்றவுடன், சசிகலாவின் கணவர் நடராஜனை நீக்குவதாக அறிவிக்காமல் விட்டாரே.. அதுவரை நல்லது. ஏனென்றால் அவர் கட்சியிலேயே இல்லை! தவிர, மீண்டும் சேர்க்கும்போது, சசிகலாவின் கணவரை சேர்க்கால் இருந்தால் சரி..” என்று சொல்லி சிரிக்கிறார்கள் அரசியல்வட்டாரத்தில்.

அதே நேரம், “அ.தி.மு.கவின் பண்பாட்டுக்கு ஏற்ப, தனது நீக்கம் பற்றி எந்த கருத்தும் கூறாமல் இருப்பதால், ஐ.பி.எஸ் நடராஜை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வார்” என்றும் பேசப்படுகிறது.