jjjjj-21

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அந்த நேரத்து  சூழலைப் பொறுத்து முடிவு எடுப்போம் என சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுவில்  ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அக் கட்சியின் பொதுச்செயலாளரும்  தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசியதாவது:

“தமிழகத்தில் குறை காண முடியாத நிறைவான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.   தமது ஆட்சியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம்.

. முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் உயர்த்தியது என்னால் தான் சாத்தியமாயிற்று என்பதை யாராலும் மறுக்க முடியாது,

அண்ணா, எம் ஜி ஆர் போல் நானும் தொண்டர்களால் உயர்ந்தேன், வரலாறு காணாத மழை  அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்ட காரணமாக அமைந்து விட்டது . செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக எதிர்கட்சியினர் பொய் பிரசாரம் செய்தார்கள்.  குறிப்பாக. தோல்வி பயத்தால் திமுக பொய் பிரசாரம் செய்கிறது.

இதனை தொண்டர்கள் மக்களிடம் எடுத்துக்கூற  வேண்டும் . திமுக ஆட்சியில் நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மின் வெட்டு காரணமாக தமிழகம் இருளில் மூழ்கிக் கிடந்தது.  அது மட்டுமா..  திமுக ஆட்சியில் நடந்த குற்றம் ஒன்றா இரண்டா ?

அதிமுக என்னும் மக்கள் இயக்கத்திற்கு தனி வரலாறு உண்டு. நமக்கு எப்போதும் வெற்றி தான் எதிர்கட்சியினரின் பொய் பிரசாரத்தை உடனுக்குடன் நாம் முறியடிக்க வேண்டும்.

2009  மற்றும் 2011 ம் ஆண்டு தேர்தல்களில் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம்.  , 2014 பாராளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களை பெற்று மகத்தான வெற்றி பெற்றோம்.

எனவே கூட்டணி என்பது எப்போதும்  ஒரே மாதிரி இருப்பதில்லை , தேர்தல் நேரத்தில் அப்போதைய சூழ் நிலைக்கேற்ப முடிவுகள் எடுப்பேன் .

வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக  பெரும் வெற்றி பெறும், நமது வெற்றி நிலையானது உறுதியானது, மக்களிடம் அரசின் கொள்கைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இது வரை நமது இயக்கம்  ஆறு முறை ஆட்சி புரிந்துள்ளது , மீண்டும் அதிமுகவுக்கு வெற்றிதான் , அதிமுகவின் ஆட்சி உறுதி செய்யப்பட்டு விட்டது . அதிமுக விற்கு எந்த காலத்திலும் தோல்வி கிடையாது.  எந்த காலத்திலும் நமக்கு சிறுமை இல்லை பெருமை தான்” என்று ஜெயலலிதா பேசினார் .

தனது பேச்சின் போது  ஜெயலலிதா சொன்ன கதை:

வெங்காய மூட்டையை திருடி மாட்டிக்கொண்ட திருடன் அரசன் முன் நிறுத்தப்பட்டான்.

அரசன், திருடனை பாரர்த்து, “ உனக்கு நூறு ரூபாய் அபராதம் அல்லது , 100 கசை அடி அல்லது பச்சையாக வெங்காயம் சாப்பிட வேண்டும். , இதில் உனக்கு எந்த தண்டனை வேண்டும் என நீயே தீர்மானித்துக்கொள்” என்றான்.

திருடன் , முதலில் வெங்காயம் சாப்பிட ஒத்து கொண்டான். , சாப்பிட துவங்கியதும், கண்ணில் இருந்து கண்ணீர் எரிச்சல் வந்தது , “ என்னால் முடியவில்லை . சாட்டையடி கொடுங்கள்” என்றான்  ஆனால் பத்து  அடிக்கு மேல் தாக்கு பிடிக்கவில்லை, “ஐயோ..நூறு 0 ரூபாய் அபராதம் கட்டி விடுகிறேன்” என்றான்.
இது போல தெரியாமல் செய்த தவற்றை மன்னித்து விடுங்கள் என ஒருவர் ஊர் ஊராக சென்று பாவ மன்னிப்பு கேட்டு வருகிறார். “தமிழர்கள் என்ன ஏமாளிகளா” என்று கேட்கிறார் . அவர்கள் நம்மைப்பற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட வேண்டும் என கிளம்பி இருக்கின்றனர். இதனை அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும்.” என்று கதை செல்லி எதிர்க்கட்சியினரை தாக்கினார் ஜெயலலிதா.