modi 123
ஆசிஸ் சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தில்லி “இந்தியா கேட்’ பகுதியில், கடந்த ஜூன் 21ஆம் தேதி, சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற மோடி, அங்கிருந்த தேசியக் கொடியை ஒரு கைக்குட்டையைப் போல பயன்படுத்தினார்.
இதேபோல், தனது அமெரிக்கப் பயணித்தின்போது அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடம் அளித்த தேசியக் கொடியில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். இது தேசியக்கொடி தொடர்பான விதிமுறைகளுக்கு முரணானது.
எனவே, தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்டது தொடர்பாக, மோடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்டது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, தில்லி நீதிமன்றம் புதன்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இதுதொடர்பாக தில்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிக்தா சர்வாரியா புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், “இந்த மனு மீதான விசாரணை, மே மாதம் 9ஆம் தேதி நடைபெறும்; அன்றைய தினம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரதமர் மோடிக்கு சம்மன் அனுப்புவதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.