துவங்கியது.. நெஞ்சம் மறப்பதில்லை!

Must read

CZzEbxoUUAITN26
னுஷுடனான  படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அடுத்த ப்ராஜக்டில் இறங்கிவிட்டார் செல்வராகவன்.   எஸ்.ஜே. சூர்யாவை ஹீரோவாகக் கொண்டு “நெஞ்சம் மறப்பதில்லை”  படத்தை  இயக்குகிறார். தயாரிப்பது கெளதம்மேனன். கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் செல்வராகவன் , ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா , இசை சந்தோஷ் நாராயணன் , கலை விஜய் ஆதிநாதன் .
சூர்யாவுக்கு ஜோடி ரெஜினா.
இசை படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் தலை காட்டிய எஸ்.ஜே சூர்யாவுக்கு தற்போது செல்வராகவன் உடன் (முதல் முறையாக)  கை கோர்த்து உள்ளது உற்சாகத்தை அளித்துள்ளது
இந்த படத்தின் படப்பிடிப்பு  பெரிய விளம்பர தடபுடல்  இன்றி, இன்று காலை திருவான்மியூரில் ஒரு பங்களாவில் துவங்கியது . தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி, மார்ச் இரண்டாம் வாரத்துக்குள்  மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்களாம். ஏப்ரல் 14 சித்திரை  பிறப்பன்று படம் ரிலீஸ் என்கிறார்கள்.
“பழைய நெஞ்சம் மறப்பதில்லை, பேய் படம். அதையே ரீமேக் செய்கிறாரகள்” என்று ஒரு செய்தி பரவி இருந்தது. இதை செல்வராகவன் மறுத்தார். “பெயர் மட்டும்தான் முந்தைய படத்திலிருந்து எடுத்திருக்கிறோம். கதை முற்றிலும் புதியது” என்றார்.
 

More articles

Latest article