துபாயில் இந்தியர்கள் கடத்தல்: 3 பாகிஸ்தானியர்கள் சிக்கினர்

Must read

hand cuffs
துபாய்:
துபாயில் இந்திய தொழிலாளர்கள் இருவரை தாக்கி, கொள்ளையடித்த சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு துபாயில் பணிபுரிந்த இரு இந்தியர்கள் தாக்கப்பட்டனர். அவர்களை காருடன் கடத்திச் சென்ற 3 பேர், அவர்களிடம் இருந்து கேமரா, தங்கச் சங்கிலி, ரூ. 30 ஆயிரம் ரொக்கம், செக்புக் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். சிறிது தூரம் சென்றவுடன் அவர்களை கீழே தள்ளவிட்டு, காரையும் கடத்திச் சென்றுவிட்டனர். போலீசாருக்கு தகவல் அளித்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More articles

Latest article