திருமாவளவன் தூங்கவில்லை; சிந்தித்துக்கொண்டிருந்தார்:வைகோ

Must read

vai vaiko
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார். 30 நிமிடங்களுக்கும் மேல் அவரது உரை நீடித்த நிலையில், மேடையில் அமர்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தூங்கி வழிந்தனர். தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் தவித்தனர். வைகோ தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது, தொண்டர்களில் சிலர் மற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதனைக் கண்டு வைகோ கோபமடைந்தார்.
வைகோ திடீரென குரலை உயர்த்தி ஆவேசமாகப் பேசுவதைக் கேட்டதும், முத்தரசன், தொல். திருமாவளவன் ஆகியோர், வைகோவின் பேச்சை மீண்டும் கவனிக்கத் தொடங்கினர். அவர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தூங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் பேசுகையில், இன்று நான் வடை சாப்பிடும் போது கூட மறைவில் தான் சாப்பிட்டேன். இல்லை என்றால் கூட்டணி தலைவர்களுக்கு கொடுக்காமல் வடை சாப்பிடுகிறார் வைகோ என்று செய்தி போடுவார்கள் என பேசினார்.
தொடர்ந்து பேசிய வைகோ, ‘’ திருமாவளவன் தூங்கவில்லை. சிந்தித்துக்கொண்டிருந்தார். அசதியின் காரணமாக கண் அயர்ந்திருந்திருக்கலாம் அல்லது சிந்தித்திருக்கலாம் என்று மேடையில் தூங்கிய தலைவர்களுக்கு ஆதரவாக வைகோ விளக்கமளித்தார்.

More articles

Latest article