krishnasamy
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது என்றும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் உடன்பாடு கையெழுத்தானது.