தஸ்லிமா

விரும்பாதவர்கள் பக்கத்து முஸ்லிம் நாடுகளுக்குச் செல்லட்டும்! தஸ்லிமா சர்ச்சை பேச்சு

டில்லி:

பிரிவினை நடந்த போது எப்படி அருகில் உள்ள நாடுகளில் இருந்து இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தார்களோ, அதே போல இப்போதும் இங்கு இருக்க விரும்பாத முஸ்லீம்கள் பக்கத்து முஸ்லீம் நாடுகளுக்கு சென்று விட வேண்டும்” என்று பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘தாத்ரி மாட்டிறைச்சி விவகாரத்தில், மத்திய அரசுக்கு அதிருப்தியை தெரிவிக்கும் விதத்தில் சில இந்திய எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக்கொடுத்து வருகின்றனர்.

இது பற்றி குறிப்பிட்ட பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், “இந்திய எழுத்தாளர்கள் இரட்டை முகத்துடன் செயல்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், ”இந்திய எழுத்தாளர்கள், சிலர் பத்ம விருதுகளை திருப்பி அளிப்பதில் அரசியல் நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எழுத்தாளர்களுக்கு அரசியல் தெரியும். ஆகவே யாரும் அவர்களை தூண்டிவிட முடியாது.

ஆனால் தங்களுக்கு அதிருப்தி வரும்போது மட்டும் இரட்டை முகத்துடன் இவர்கள் செயல்படுகிறார்கள். உதாரணமாக என்னையே சொல்லலாம். லஜ்ஜா என்ற நாவல் எழுதியதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என் உயிருக்கு கெடு வைத்தார்கள்.

உயிர் தப்பி டில்லி வந்த என்னை இங்கே வீட்டுக் காவலில் வைத்தது அரசாங்கம். பிறகு நான் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டேன். எனது டிவி சீரியல் தடை செய்யப்பட்டது. பிரபல எழுத்தாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சுனில் கங்குலி, சங்கா கோஷ் ஆகியோர் அன்றைய மேற்கு வங்க முதல்வர் பட்டாச்சார்யாவிடம், எனது புத்தகங்களை தடை செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.

அப்போதெல்லாம் எந்த எழுத்தாளரும் இதை கண்டுகொள்ளவில்லை. இப்போது மட்டும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.” என்றார்.

மேலும் அவர், ““இந்தியாவில் மதச்சார்பின்மையை பின்பற்றும் பெரும்பாலோர் முஸ்லீம்களுக்கு ஆதராகவும், இந்துக்களுக்கும் எதிராக செயல்படுகிறார்கள். இந்து அடிப்படைவாத்ததை எதிர்க்கும் இவர்கள், முஸ்லீம் அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறார்கள்.

தவிர இங்குள்ள அரசியல்வாதிகள் ஓட்டுக்காக முஸ்லீம்களை ஆதரிக்கிறார்கள். இது, சில இந்துக்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கிறது. முஸ்லீம் என்பதாலேயே சில நேரங்களில் முஸ்லீம்கள் பாதிக்கப்படுவதும் உண்மைதான். அதே நேரம் 2013ல் ஒரு முறை மேற்கு வங்கத்தில் ஒரு இந்து கிராமத்தையே முஸ்லீம்கள் எரித்த சம்பவமும் நடந்தது.
நாடு பிரிவின்போது எப்படி அருகில் உள்ள நாடுகளில் இருந்து இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தார்களோ, அதே போல இப்போதும் இங்கு இருக்க விரும்பாத முஸ்லீம்கள் பக்கத்து முஸ்லீம் நாடுகளுக்கு சென்று விட வேண்டும்” என்றார்.

“இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் இந்த நாட்டு குடிமக்கள்தான். சுதந்திரபோராட்டத்திலும் அவர்கள் கலந்துகொண்டு தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் தஸ்லிமாவின் பேச்சு முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்க வைக்கிறது. தஸ்லிமா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.