திலீபனுக்கு வரவேற்பு /  தாமரை
திலீபனுக்கு வரவேற்பு / தாமரை

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், இந்திய தேசிய கொடியை எரித்து அதை படமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் காவலர்களின் தாக்குதலால் அவரது கை உடைந்தது என்றும் தகவல் பரவியது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட திலீபன் மகேந்திரன் இன்று ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.  அவருக்கு சில அமைப்புகள் வரவேற்பு கொடுத்ததாகவும் தகவல் பரவியிருக்கிறது.
திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, கவிஞர் தாமரை ஒரு கடிதம் எழுதியிருந்தார். 
“திலீபன் மகேந்திரன்களுக்கு ஒரு திறந்த மடல்!” என்ற தலைப்பிலான அந்த கடிதத்தில் இருந்து சில பகுதிகள்:
இனி அரசியல் பதிவுகள் இடுவதில்லை, அரசியல் களத்தில் நிற்பதில்லை, அரசியல் பேசுவதில்லை என்று நான் எடுத்த கடுமையான நிலைப்பாடு காரணமாக திலீபன் மகேந்திரன் தேசிய கொடியை எரித்த விவகாரத்தையும் மௌனமாகக் கடந்து விட்டேன்.
ஆனால் கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் தொடர்பாக வெளிவரும் செய்திகள்என்னை என் நிலைப்பாட்டிலிருந்து சற்றே தளரச் செய்து விட்டனசில செய்திகளைக் கூறவேண்டிய நேரத்தில் கூறாமல் போவதும் தவறானதே!. ஒரு பொதுநல நோக்கோடு சில செய்திகளைக் கூற விழைகிறேன்.
2009
ல் ஈழப்போர்ச் சூழலில் , அப்போதைய தமிழ்த்தேசிய விடுதலை இயக்க உறுப்பினர்கள் (தங்களுடன் இணைந்து இருந்த இன்னும் மூன்று இயக்கங்களுடன் ) இதேபோல் இந்திய தேசியக் கொடியை எரிக்க முடிவு செய்தனர்.  கோவை, தஞ்சை, ஈரோடு, சென்னை ஆகிய நான்கு இடங்களில்  தேசியக்கொடியை எரித்துக் கைதானார்கள்.   
அந்த இயக்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர் தியாகுஇந்த, தேசிய கொடி எரிப்புப் போராட்டத்திற்கு இயக்கத்துக்குள்ளேயே  ஆதரவு இல்லாத நிலையில் இவர்தான், எரித்தே ஆக வேண்டும் என்றார்.
மொத்தமே  நான்கு மாவட்டங்களில் மட்டும் எரித்து, 15 பேர் கைதானார்கள்சென்னையில் -1, கோவையில் – 5, தஞ்சையில் – 5, ஈரோட்டில் – 4. 
இதில் சென்னை, தஞ்சை, ஈரோடு ஆகிய மாவட்டத்தில் கைதானவர்களுக்கு, கடுமையான நிபந்தனைகள் இன்றி ஜாமீன் கிடைத்துவிட்டது.
ஆனால். கோவையில் கைதான ஐவருக்கும் வித்தியாசமான நிபந்தனை விதிக்கப்பட்டது.
“தேசிய கொடியை எரித்த இந்த ஐவரும்,  அவரவர் வீட்டில் ஒரு வாரம் தங்கள் வீட்டின் முன் தேசிய கொடியை  கம்பத்தில் ஏற்றி சல்யூட் அடிக்க வேண்டும்” என்பதுதான் அந்த நிபந்தனை.
இந்திய தேசிய கொடியை எரித்த அவர்களும், இந்த நிபந்தனையை ஏற்று வெளியே வந்தார்கள்.  ஒரு வாரம் இந்தியக் கொடியைத் தத்தம் வீடுகளில் ஏற்றி சல்யூட் அடித்தார்கள். இந்த ஐந்து பேரில் தேவேந்திரன், குணசேகரன் இருவரும் தியாகுவின் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே, கடந்த  2012 ம் ஆண்டு  குடியரசு தினத்தன்று, ‘இமயம்தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி !.
“இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறதா” என்பது போன்ற ஒரு விவாதம். அதற்கு நடுவராகத் தியாகுகுடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி அல்லவா ?. அரங்கமே இந்திய தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, பின்னணி, மேசை என எல்லா இடங்களிலும் இந்திய தேசியக் கொடி மின்னிக் கொண்டிருக்க, மையத்தில் அமர்ந்த தியாகு தன் சட்டையில் ஒருஇந்திய தேசியக் கொடியைப் பெருமிதமாகக் குத்திக் கொண்டு, முகமெல்லாம் புன்னகையாக, ‘இந்தியாவின் வளர்ச்சிபற்றிப் பிளந்து கட்டினார்
அதைக்கண்ட தமிழ்த்தேசிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.  குறிப்பாக தியாகுவின்  தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தியாகு மீது கடும் வருத்தத்தில் இருந்தார்கள்.
தியாகு வழக்கம் போல் தன் நாவன்மையால் தன் செயலைப் பலவகையில் நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். ( மாதிரிக்கு ஒன்று : “அந்தக் கொடி குத்தியிராவிட்டால் நான் அன்று நிகழ்ச்சி நடத்தியிருக்க முடியாது” ). ஆனால் உறுப்பினர்கள் அவற்றை ஏற்க மறுத்துக் கடுமையாக எதிர்த்து வாதிட்டனர்.  எதிர்ப்பு வலுப்பதைக் கண்ட தியாகு இறுதியில் பணிந்து, தன்வருத்தத்தைசம்பிரதாயமாகத் தெரிவித்துக் கொண்டார்நான்கு சுவர்களுக்குள் !.

இப்போது நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியத் தேசியக்கொடி எரிப்பு சம்பவம் நடந்துள்ளதுநாளையும் எவரேனும் எரிக்க முற்படுவார்கள்.
இந்தக் கொடி எரிப்புகளால் ஆவது என்ன ?.
தம்பி திலீபன் மகேந்திரா…!
மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்தது உனக்குத் தெரியுமா?    உனக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் நீ சார்ந்த இயக்கக் குழுமம், வட்டாரங்கள், ஊடகங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்அவர்கள் யாராவது இதற்குக் கண்டனம் தெரிவித்தனரா ? ஏதாவது விவாதம் நிகழ்ந்ததா ? இதன்மேல் ஓர் அறிக்கையாவது யாராவது வெளியிட்டனரா ? ஏன் செய்யவில்லை ? இதுதமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின்உட்கட்சி விவகாரம் என்று கடந்து போய் விட்டார்களா  அல்லது நமக்கெதற்கு வம்பு என்று மௌனமாகப் பதுங்கிக் கொண்டார்களா ?
இது உட்கட்சி விவகாரம்தானாஇந்திய தேசியத்தைக் கடுமையாக எதிர்க்கும் தியாகு, இந்திய தேசியக்கொடியை எரிக்கத் தன் தொண்டர்களைத் தூண்டிய தியாகு, அதே இந்திய தேசியக் கொடியைச் சட்டையில் அணிந்து வெட்டவெளியில் காட்சி நிகழ்த்துவது உட்கட்சி விவகாரம்தானா தம்பி ?.
அன்றே இந்த விவகாரம் அம்பலப்படுத்தப்பட்டுஅனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டிருந்தால் பல பேருக்குத் தெளிவு கிடைத்திருக்கும் அல்லவாதலைவர்கள் பலர் மேடையில் பேசுவது ஒன்று, மேடைக்குப் பின்னால் செய்வது வேறொன்று என்று சில பேருக்காவது புரிந்திருக்கும் அல்லவா?.
அப்பாவித் தொண்டர்களின் அரும்பான உணர்வுகளைத் தூண்டிப் பெரிதாக்கி, அவர்களை அபாயகரமான செயல்களைச் செய்ய வைத்துஅந்தப் புகழில் குளிர் காய்வது பல தலைவர்களுக்கும் அரசியலில் பாலபாடம் என்பதை நீ அறிவாயா?.
எனக்கும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இதைத் தெரிந்து கொள்ள எத்தனை ஆண்டுகள் பிடித்தன என்று உனக்குத் தெரியுமா ?. எங்களுடைய பொன்னான நேரம், உழைப்பு, உணர்வு, இளமை, பணம், செல்வம், நல்வாய்ப்புகள்இப்படி எதை எதையெல்லாம் இந்தத் தலைவனின் வார்த்தை சாலத்தில் விழுந்து மயங்கி இழந்தோம் என்பதை நாங்கள் இன்னும் வெளியே சொல்லவில்லை.
நீ கொடியை எரித்தாய், காவல்துறையால் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப் பட்டாய் என்ற செய்தி அறிந்து நாங்களெல்லாம் பதறித்தான் போனோம். கொடியை எரித்தால் அதற்கு சட்டம் என்ன தண்டனை சொல்கிறதோ அதைக் கொடுத்துவிட்டுப் போவதுதான் காவல்துறையின் வேலைஆனால், அதை மீறி நீ துன்புறுத்தப்பட்டிருந்தால் அது ஏற்புடையதன்றுஅதற்காக இதோ நான் காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
சமூகவலைதளங்களில் தியாகுவை விமர்சித்து வெளியான படம்
சமூகவலைதளங்களில் தியாகுவை விமர்சித்து வெளியான படம்

அவன் இளைஞன், உணர்ச்சிவயப்பட்டு சாகசச் செயலாக எண்ணிச் செய்து விட்டான், அவனுக்கு அறிவுரை கூறி, சட்டம் அளிக்கும் தண்டனை மட்டும் விதித்திருக்கக் கூடாதா ?” என்று இதோ நான் காவல்துறையைக் கேட்கிறேன். அது கண்டிக்கத்தக்க வன்முறைச் செயல் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அதே சமயம், தொண்டனை மூளைச்சலவை செய்து அவனை ஆபத்தில் சிக்க வைத்து விட்டு, தனக்கு மட்டும் ரகசியமான தனிவழி வைத்துக் கொள்ளும் தலைவனின் நயவஞ்சகம் இன்னும் வன்முறையானதல்லவா ?.
காவல்துறையைக் கண்டிக்க வேண்டுமென்றால் தலைவனின் கள்ளத்தனத்தையும் கண்டிக்க வேண்டுமல்லவா ? அந்த வன்முறையிலிருந்து இந்த வன்முறை எப்படி வேறுபட்டது என்று விளக்க முடியுமா ? சொல்லப்போனால் அதைவிடப் பெரிய வன்கொடுமை இதுதான் என்று நான் சொல்வேன்.
உன்னைத் துன்புறுத்தினார்கள் என்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராடியுள்ளனர் பல தோழமை இயக்கங்கள்அந்த இயக்கங்கள் எல்லாம் இந்தியத் தேசியத்திற்கு எதிரானவை என்று நான் அறிவேன்உனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோருகிறார்கள்.
நல்லது, அப்படியெனில், ‘தமிழ்த்தேசியம்பேசிக் கொண்டுஇந்திய தேசியக் கொடியைப் பெருமையாக நெஞ்சில் தாங்கிய தியாகுவையும் அவரதுதமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தையும் அவர்கள் கண்டிப்பார்களா ?.  “இரட்டை வேடம் போட்டுத் தொண்டர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் தியாகுவே, தமிழ் அரசியலை விட்டு வெளியேறுஎன்று முழக்கம் போடுவார்களா
 ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ளதமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவரால் ஏமாற்றப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கைக்கு நியாயம் கோருவார்களா ?  குறைந்தது, தமிழர் உரிமை சார்ந்த கூட்டமைப்புகளில் இனிமேல் இந்த இரட்டை வேடதாரிக்கு இடமில்லை என்றாவது அறிவிப்பார்களா ?.
இவை எல்லாம் நடப்பதாக இருந்தால்,  2012 ல் இந்த செய்தி வெளியானவுடனேயே செய்திருப்பார்கள். செய்யவில்லையே, ஏன் ?.
ஏனென்றால், நம்மிடம் ஓர் அளவுகோல் இருக்கிறது. அதில் அளந்தால், நமக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னி, அடுத்தவன் தவறு செய்தால் தட்டிக் கேட்போம், நாமே செய்தால் மூடி மறைப்போம்…. என்பதுதான் வரும்!
அதற்கும் மேல், தியாகுவைத் தட்டிக் கேட்க யாருக்கும் துணிவில்லை, அவரது நாவன்மைக்கும் நயவஞ்சகத்துக்கும் ஈடு கொடுக்க யாருக்கும் திராணியில்லை என்பதுதான் கசப்பான உண்மை !.  எனவேதான் கண்டுகொள்ளாமல் கடந்துபோகத் தலைப்பட்டார்கள். இத்தகையவர்களை வைத்துக் கொண்டா தமிழ் ஈழத்தையும், தமிழ்நாட்டையும் அடையப் போகிறோம்….??????. ஹைய்யோ ஹைய்யோ…..
நீ இளைஞன், நாளை வெளியே வந்தால் உனக்கு உழைத்துப் பிழைப்பதற்குக் கை வேண்டுமல்லவா தம்பிஉன் பெற்றோர்கள் உனக்கு நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்களா ? உட்கார்ந்து சாப்பிட உனக்கு உத்தரவாதம் இருக்கிறதா ?
இதுபோன்றபிழைப்புவாத’, ‘வாய்ச்சவடால்தலைவர்களுக்குச் சோறு போட நூறு பேர் காத்திருப்பார்கள். உழைக்காமல் உல்லாச வாழ்வு வாழ்வது எப்படி என்பது அவர்களுக்கெல்லாம் அரசியலில் இன்னொரு பாலபாடம் !.
எதற்காக எதைச் செய்வது என்ற விவேகம் கூட இல்லையா ? கொடியை எரித்தால் இந்தியா அஞ்சி நடுநடுங்கி விடுமா ?
கொடியை எரிப்பானேன், பிறகு ஏற்றி வைத்து சல்யூட் அடிப்பானேன் ?. கேவலம் ஒன்றரையணா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றுவதற்காக இந்திய தேசியத்தை இதயத்தில் தாங்கிக் கொள்ளும் தலைவர்களுக்கு இடையில், இந்திய எதிர்ப்பைக் காட்ட ஒரு தொண்டனுடைய கை என்பது மிக மிக அதிக விலையல்லவா ?
எதற்கு எவ்வளவு விலை கொடுப்பது என்பது கூடத் தெரியாத சிறுமதியாளர்களான நாமா தமிழ்நாட்டை விடுதலை அடையச் செய்யப் போகிறோம்தமிழ் ஈழத்தை வாங்கிக் கொடுக்கப் போகிறோம் ?
ஈழப்போர் தொடக்கம் இன்று வரையிலான எட்டு ஆண்டுகளில் தமிழ்த்தேசியம்/திராவிடத்தேசியம் எந்த அளவில் மக்களைப் போய்ச் சேர்ந்திருக்கிறது ? வெகுமக்களை ஈர்க்காத எந்த இயக்கமும் வெற்றியடையாது என்பது நமக்குத் தெரியாதா ?
கார்கில் போர், சியாச்சின் பனிச்சரிவு என்றால் நம் வெகுமக்கள்தமிழ்மக்கள் துடிதுடிக்கிறார்கள். ஒரு திலீபன் மகேந்திரன் கை ஒடிந்தது என்றால் ஒரு செய்தியாகக் கூடக் கேட்காமல் கடந்து போய்விடுகிறார்கள்.
எனில், இத்தனை ஆண்டுகளாக, திராவிடத்தேசியம்/ தமிழ்த்தேசியம் நடத்தியும் மக்களைச் சென்றடையவில்லை என்றால் எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது  என்றுதானே பொருள் ? அந்தத் தவறு என்ன, அதைத் திருந்திக் கொள்வது எப்படி என்றுதானே யோசிக்க வேண்டும் ?
அதைவிட்டுவிட்டு அடுத்த போராட்டம் என்ன, அடுத்த போஸ்டர் எங்கு ஒட்டுவது, அடுத்த கொடியை எங்கு எரிப்பது என்ற இந்தப் பாணியிலேயே யோசித்தால் இதற்கு முடிவுதான் என்னஇன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்தும் போஸ்டர் ஒட்டிக் கொண்டும், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுக் கொண்டும் இருப்பதுதான் நடைபெறும்.
இயக்குநர் வெற்றிமாறனின் சமீபத்தியவிசாரணையில்,  ‘சிஸ்டம் சிஸ்டம்என்று ஒரு வார்த்தை அதிகம் புழங்குகிறதுஅதிகார வர்க்கத்திற்கு ஒருசிஸ்டம்இருப்பது போலவே, அவர்களைத் தட்டிக் கேட்பதாகச் சொல்லப்படும் கொள்கை அரசியல் வர்க்கத்திற்கும் ஒருசிஸ்டம்இருக்கிறதுஇரண்டுக்கும் அடிப்படைப் புள்ளிநேர்மைதான்இருதரப்பிலுமே அது இல்லாத போது, பொதுமக்கள் பார்வையில் இரண்டும் ஒன்றாகக் காட்சி அளிப்பதில் தவறில்லையே !
தவறு எங்கே நிகழ்கிறது என்று நான் கண்டு பிடித்து விட்டேன். ஆனால் அதற்கு நான் கொடுத்த விலைதான் மிக அதிகம்ஈடு செய்ய முடியாத என் இளமைக்கால இருபது ஆண்டு காலம் !
நான் மேலே சொன்ன நிகழ்வு, மூழ்கிய பனிப்பாறையின் மேல் நுனி மட்டும்தான் ( Tip of the Ice berg ) !.  சொல்வதற்கு இன்னும் நிறைய பாடம் என்னிடம் உள்ளதுநேரம் வரும்போது எல்லாவற்றையும் அப்பட்டமாக எடுத்துரைப்பேன்.
இப்போது என் மௌனம் கலைத்து சிறிதே பேசக் காரணம் கூட, வழி தவறும் தருவாயில் இருக்கும் சில அப்பாவி இளைஞர்களையேனும் மீட்டெடுக்கலாமே என்கிற ஆதங்கம்தானே தவிர வேறில்லை.
இந்தக் கட்டுரையை நான் எழுதியதற்கும் கூட என்மேலேதான் பாய்வார்கள்நான் காட்டிக் கொடுத்து விட்டேன் என்று !
ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நானும் தமிழ்த்தேசியவாதிதான்பெரியார் போட்ட சமூக மாற்றப் பிச்சையில் கல்வி கற்று முன்னுக்கு வந்தவள் என்பதால் திராவிடத் தேசியவாதியும் கூட !
தமிழ்மொழியும் இனமும் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே என்  தீராத ஆசை ! ஓயாத அலையாக என் நெஞ்சில் அடித்துக் கொண்டிருப்பதுவும் அதுவே ! அதில் எந்த சமரசமுமில்லை !
அதற்காக நான் தேர்ந்தெடுத்த பாதைநேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், வள்ளுவம் !
It’s a road less taken, but i DARED !
முடிந்தால் நீங்களும் முயன்று பாருங்களேன் அன்புத் தம்பிகளே !” –   இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் பாடலாசிரியர் தாமரை.