தலைக்கவசம்.. உயிர்கவசம்..!

Must read

armour

தலைக்கவசம்.. உயிர்கவசம்..!
உண்மைதான்.,
காவல்துறையினடமிருந்து,
முதல் கவசம்..
சீரிவரும் கார்கள்..,
அதிவேகமாய் எமனாய் வரும் குடிநீர்
லாரிகள்…,
கடும் நெரிசலிலும் ரேஸ்
பைக் விடும் இளைஞர்கள்.,
கொஞ்சம் அசந்தால்
ஆளை நசுக்கும் மாநகர பேருந்து..,
இவை அனைத்திடமிருந்தும்
கவசம்…!!
கடன்கேட்கும் நண்பனிடமிருந்து ஒளிந்துகொள்ள ..!
காதலியை ரகசியமாய்
கூட்டிச்செல்ல.!
கந்துவட்டி கந்தனிடம்
தப்பிக்கவும் இது உதவும்.!
குண்டும்…குழியுமான
ரோட்டில் மட்டும்…இதனால்
பயனில்லை.!!
வீட்டிலும் ஹெல்மட்..
கட்டாயம் என
சட்டம் வந்தால்..
கையில் கிடைத்ததை…
எடுத்து அடிக்கும்..
.மனைவியிடமிருந்து….
கணவன்மார்களுக்கு
நிச்சயம் ..உயிர்கவசம்.!
அரசு சட்டம் இயற்றுமா..?!
-அ.முத்துக்குமார்.

More articles

Latest article