தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்றக்காவல்
உடுமலைப்பேட்டையில் கடந்த 13ம் தேதி அன்று பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நடுரோட்டில் வேறு சமூகத்தைச்சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட 5 பேரும் உடுமலைப்பேட்டையில் நீதிபதி ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின்னர், ஐந்து பேரையும் 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீவித்யா உத்தரவிட்டார்.