????????????????????????????????????

னது பேச்சுக்களாலும், படைப்புகள் அல்லாத எழுத்துக்களாலும் பரபரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றவர் எழுத்தாளர் சாருநிவேதிதா. தற்போது இவர், தான் குடியிருக்கும் வீட்டை வீட்டு உரி்மையாளர் காலி செய்யச் சொல்கிறார் எனவும் அவசரப்படுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் பகிரங்கமாக தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

அவரது திகிலூட்டம் பதிவு வருமாறு:

“நான் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் மிகவும் நல்லவர். எந்தத் தொந்தரவும் கொடுத்ததில்லை. இவ்வளவுக்கும் எதிர்வீடுதான். எட்டு ஆண்டுகளாக இந்த மைலாப்பூர் வீட்டில் இருக்கிறோம். தனி வீடு. இப்போது காலி பண்ணச் சொல்கிறார். இந்த வீடு இல்லாவிட்டால் இன்னொரு வீடு என்று என்னால் போக முடியாத நிலை.

காரணம், என்னிடம் இருக்கும் க்ரேட் டேன் நாய். அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் போக முடியாது. தனி வீட்டுக்குத்தான் போக முடியும். அதிலும் போரூர், மடிப்பாக்கம், மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கும் குடிபெயர முடியாது. என்னுடைய வேலைக்கான அத்தனை இடங்களும் இங்கே தான் இருக்கின்றன.

எனவே என் வீட்டுக்காரர் என்னை ரொம்பவும் துரிதப்படுத்தினால் எனக்குத் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே ஒரு தனி வீடு உள்ளது. வாடகை 60000 ரூ என்றார்கள். நல்லவேளை ஹார்ட் அட்டாக் வரவில்லை.

இங்கே ராஜாஅண்ணாமலைபுரம், மந்தைவெளி, மைலாப்பூர் பகுதிகளில் தனி வீடு உங்கள் கண்களில் தென்பட்டால் சொல்லவும். தாமதப்படுத்தாமல் சொன்ன தேதியில் வாடகை கொடுத்து விடுவேன். எப்படியாவது தற்கொலையைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் முயற்சி செய்கிறேன். சென்ற முறை வீடு தேடிக் கொடுத்தது மனுஷ்யபுத்திரனும் செல்வியும். அதற்கு நான் நன்றியாக இல்லாமல் நன்றி கெட்டவனாகப் போய் விட்டதால் இந்த முறையும் வீடு தேடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. யாரேனும் ஹெல்ப் பண்ணவும். charu.nivedita.india@gmail.com.:

யாராவது வீடு பார்த்துக்கொடுங்களேன்..! (அங்கேயும் வந்து தற்கொலை மேட்டரை அவர் எடுத்துவிட்டால் நாம் பொறுப்பல்ல..!)