hqdefault

இலங்கை அரசியல் கட்சிகளில், குறிப்பாக தமிழர் அமைப்புகளில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என்பது குறித்து கொழும்பில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரத்தினராஜா எழுதிய கட்டுரையை, “இலங்கையில் நடைபெறும் இன்னொரு போராட்டம்” என்ற தலைப்பில் சமீபத்தில் நமது patrikai.com இதழில் வெளியிட்டோம்.
இதே பிரச்சினை குறித்து சமீபத்தில் லங்காஸ்ரீ செய்தி சேவைக்கு நளினி ரத்தினராஜா பேட்டி அளித்தார். அதில், “கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி பெண்களுக்கான பங்களிப்பு அரசியலில் குறைவாகவே இருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையிலும் கூட பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு. அந்த வகையில், சமூகம், அரசியல் உட்பட எந்த விசயத்திலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
இலங்கையின் வடக்கு கிழக்கை பகுதியில், யுத்த காலகட்டங்களில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக யுத்தம் புரிந்தனர். அரசியலானாலும் சரி போராட்டமானாலும் சரி பெண்கள் சமமாகவே பார்க்கப்பட்டனர்.
ஆனால், கடந்த ஆறு வருடங்களில் புதிதாக முளைத்த கட்சிகளோ பேரவைகளோ அதை பற்றி சிந்திப்பதே இல்லை.
தமிழ் மக்கள் பேரவை அனைத்து விசயங்கள் குறித்தும் விவாதிக்கிறார்கள். ஆனால், பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றி கவனம் செலுத்ததுவதே இல்லை.
இது தொடர்பாக, தமிழ் மக்கள் பேரவையில் உள்ள ஒருவரிடம் நான் கேட்டபோது, “திறமையான பெண்களை தேடுகின்றோம்” என்று பதில் அளித்தார். ஏன் இலங்கையில் திறமையான பெண்களே இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார் நளினி ரத்தினராஜா.
அந்த பேட்டியைக்காண…
http://www.tamilwin.com/show-RUmuyBTZSWjt1G.html