12400958_820913934719485_4994182845989460132_n (1)
 
நேத்து பொங்கல் தினமாச்சே.. எல்லா தினசரிங்களையும் வாங்கி வச்சு, காலையிலேயே படிச்சேன். அதுல ஒரு தினசரியோட முதல் பக்கத்துல ஒரு இட்லி மாவு விளம்பரம். அதுல “மகிழ்ச்சியான பொங்கலுக்கு சுத்தமான,  சோடா அட்ர இட்லிகள்” அப்படின்னு ஒரு வாசகம்.
“அட்ர” அப்படின்னா என்னானு யோசிச்சிக்கிட்டே இருந்தப்பதான் புரிஞ்சுது.. “அற்ற” அப்படிங்கிறதத்தான் அப்படி எழுதியிருக்காங்கன்னு!roundboy
அடப்பாவிகளா.. கோடி கோடியா செலவு செஞ்சு விளம்பரம் கொடுக்கிறாங்களே… எழுத்து பிழை பார்க்கக்கூடாதா?  லட்ச லட்சமா விளம்ர கட்டணம் வாங்கிறாங்களே… அவங்களாச்சும் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?
தமிழர் விழாவை முன்னிட்டு தர்ற விளம்பரத்திலேயே தமிழ் தகராறு!
ம்..  மனசொடிஞ்சி இதை எழுதி ஆசிரியருக்கு மெயில் அனுப்பினேன்.. அவரு பதில் அனுப்பினாரு:
“நம்ம இதழ்லேயே எழுத்துப்பிழை வருதேப்பா.. இந்த பொங்கல் தினத்திலிருந்து, இனிமே எழுத்துப்பிழை இல்லாம செய்தி தருவோம்னு உறுதி எடுத்துக்க. அதுக்கப்பறம் மத்தவங்களை சொல்லலாம்.”
ம்.. அதுவும் சரிதான்.. இனிமே பிழைகள் இல்லாம பாத்துக்கணும்.. !
(அதுக்காக அடுத்தவங்க பண்ண தப்ப சுட்டிக்காட்டாம இருக்க முடியுமா?)