M_Id_479893_
சென்னை:
மிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.  மூன்று வருடங்களுக்கு அவர் பொறுப்பில் இருப்பார் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் விதிகளின்படி கிளை கமிட்டி முதல் அகில இந்திய தலைவர் வரை அனைத்து பதவிகளுக்கும் மூன்று வருடங்களுக்கு  ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். 2009 மற்றும் 2012-ல் நடந்த தேர்தல்களில் மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த  பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அவர் மத்திய அமைச்சர் ஆனதை தொடர்ந்து, 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழிசை சவுந்திரராஜன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவரது பதவிக்காலம் முடிவடைவதால் புதிய தலைவர் குறித்த பேச்சு எழுந்தது.  ஹெச். ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரது பெயர்கள் இந்த பதவிக்கு அடிபட்டன
இந்நிலையில்  தமிழிசை சவுந்தரராஜனே  தலைவராக  நீடிப்பார் என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று அறிவித்தார்.