தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Must read

evks

 

சென்னை:

“தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு கூட் டணி ஆட்சி அமையும் வாய்ப்பேஅதிகமாக உள்ளது” என்று தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது:

“ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, தமிழகத்தில் பொது பிரச்சினை களில் ஒருங்கிணைந்துபோராட்டத்தில் ஈடுபடுவோம்.  குறிப்பாக மதுவிலக்கு போராட்டம் விரைவில் மிகப்பெரிய அளவில்தீவிரமடையும். மக்களின் உள்ளக் குமுறல்களை நீண்ட நாட்களுக்கு அடக்கி வைக்க முடியாது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பு குறித்து நான் தெரிவித்தகருத்தில் எந்தத் தவறான நோக்கமும் இல்லை. ஆனால், சிலர், யூகத்தின் அடிப்படையில் கருத்துக்களை திரித்து பேசுகிறார்கள்.

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு கூட் டணி ஆட்சி அமையும் வாய்ப்பே அதிகமாகஉள்ளது. பெரும்பாலான கட்சிகள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருக்கின்றன” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

More articles

5 COMMENTS

Latest article