145594906831696
துரை.செந்தில்குமார்இயக்கத்தில் தனுஷ்நடித்து வரும் படம்‘கொடி’. இப்படத்தின்படப்பிடிப்பு பொள்ளாச்சிமற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில்படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது.
தனுஷ், அனுபமா, காளிஉள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். சந்தோஷ்நாராயணன்இசையமைத்து வரும்இப்படத்தை முதல் பிரதிஅடிப்படையில் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம்தயாரித்து வருகிறது.
“சரி, இதெல்லாம் ப்ரஸ் ரீலிஸ் விசயம்தானே?”என்று முணுமுணுக்கிறீர்களா.. இன்னும் இருக்கிறது மேட்டர்.
மேலே மேல போய்க்கொண்டிருந்த தனுஷின் கிராஃப் “தங்கமகன்” திரைப்படத்தின்தோல்வி மூலம் இறங்குமுகம் ஆகியது.
ஆகவே,  அடுத்து ஒப்புக்கொண்ட  ‘கொடி’படத்தின் ஷுட்டிங்கைதள்ளி வைத்தார். திரைக்கதை,வசனங்கள்  பட்டி டிங்கரிங் செய்யப்பட்டன.
ஆனாலும் வசனங்களை படித்த தனுஷுக்கு பகீர். “ஓவரா அரசியல் நெடி அக்கிறதே.. காரத்தை குறைங்க” என்றார்.
அதன்படியே குறைக்கப்பட்டது.
இத்தனை முடிந்துதான் படப்பிடிப்புக்கு கிளம்பினார்கள். அதற்குள், “கொடி”படத்தின் கதை சமூக இணையங்களில் பரவியது.
தனுஷூக்கு டபுள் ஆக்ட். அதில் ஒருவர் வில்லன் அரசியல்வாதி. அவர் எதிரிகளால்  கொல்லப்படுகிறார்.
அதை மறைத்து, தான்தான் அந்த அரசியல்வாதி என்று அவரைப்போலவே உலாவருகிறார் இன்னொரு தனுஷ். மக்களுக்கு நல்லது செய்கிறார்.
இந்தக் கதை சமூக இணையங்களில் கசிய… படக்குழுவினர், “அய்யோ.. கதை போச்சே” என்று பதறுவதாக தகவல் வெளியானது.
“அடப்பாவிகளா… இருபத்தாறு வருடங்களுக்கு முன், 1990ம் ஆண்டு வெளியான இந்திரன் சந்திரன் படத்தின் கதையே இதுதானே!
சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில், கமல் நடிக்க தெலுங் கில் தயாரான படம் இந்திரடு – சந்திரடு. இதுதான் தமிழில் இந்திரன் – சந்திரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.
இதில் கமல் இரட்டை வேடங் களில் நடித்திருந்தார். ஒரு கமல் இளம் கதாநாயகன். இன்னொரு கமல் வயதான அரசியல்வாதி. மேயர். அவர்தான் வில்லன்.
வில்லன் திடுமென இறக்க, அவனைப்போலவே வேடம் போடுவார் கமல்.
இதன் தெலுங்கு மூலம், பிலிம்பேர் விருதுகூட பெற்றது.
(கேரள நடிகை ) ஜெயலலிதா மற்றும் குயிலியுடன் மேயர்கமல் அடிக்கும் கொட்டம் அப்போது ரொம்பவே ரசிக்கப்பட்டது. சின்ன கமலுக்கு ஜோடியாக ஆட்டம் போட்ட விஜய்சாந்தியையும் மறக்கமுடியுமா?
அதே கதையை எடுத்துவிட்டு, லீக் ஆகிவிட்டது கதை என்று புலம்புகிறார்களே!
என்ன கதை அய்யா இது”
என்று புலம்புகிறார் ஒரு சீனியர் கோட்டிசன். (அதாங்க சீனியர் கோலிவிட் சிட்டிசன்!)