தனியாக நயன்தாராவை பார்ப்பவருக்கு 5 லட்ச ரூபாய்!

Must read

naya b

லைப்பைப் பார்த்துவிட்டு, “கரும்பு திங்க கூலியா” என்று அரதப்பழசான பழமொழியை நினைத்து நாக்கை சப்புக்கொட்டாதீர்கள்.

விஷயம் என்னவென்றால், நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தை திரையரங்கில் தன்னந்தனியாகப் பார்ப்பவருக்குத்தான் ஐந்து லட்ச ரூபாய் பரிசு என அறிவித்துள்ளார் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன்.

பட்.. இந்த வாய்ப்பு தமிழ் ரசிகர்களுக்கு  கிடையாதாம். ஆமாம்.. கதிகலங்க வைக்கும் “மாயா” படம் நேற்று தமிழகத்தில் ரிலீஸ் ஆகிவிட்டது.  இன்று முதல் தெலுங்கில் “மயூரி” என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. அந்த “மயூரி”யை தனியே பார்ப்பவருக்குத்தான் பரிசு!

“ஏன் இந்த ஓரவஞ்சனை” என்று இயக்குநர் அஸ்வின் சரவணனிடம் கேட்டோம்.

அவர், “தமிழில் சமீபகாலமாக நிறைய பேய்ப்படங்கள் வந்துவிட்டன. தமிழ் ரசிகர்கள் பேயையும் ரசிக்கும்(!) அளவுக்கு டெரராகிவிட்டார்கள். ஆகவேதான் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டும் போட்டி வைத்திருக்கிறோம்!” என்கிறார் புன்னகையுடன்.

போட்டியில் கலந்துகொள்ள கண்டிசன்ஸ் அப்ளை என்கிறார்கள். அதாவது, தனியாக படத்தைப் பார்க்கும்போது, பல்ஸ் மற்றும் ரத்த அழுத்தத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படக்கூடாதாம். அப்போதுதான் பரிசாம்.

“படத்தைவிட கண்டிசன் எல்லாம் பயங்கரமா இருக்கே” என்றால், “வென்றவருக்கு நயன்தாராவே நேரடியாக பரிசுத்தொகையை வழங்குவார்” என்று கூறி கூல் செய்கிறார் இயக்குநர்.

இன்னொரு சுவாரஸ்யனா விசயம்..

naya a

இந்த படத்திலும் இதே போன்ற ஒரு காட்சி வருகிறது. ஒரு பேய்ப் படத்தை தன்னந்தனியாக தியேட்டரில் பார்க்கும் தைரியசாலிக்கு ரூ 5 லட்சம் பரிசு என்று அறிவிப்பு வர.. அதை ஏற்று படம் பார்க்கும் ஒரு தயாரிப்பாளர் மாரடைப்பு ஏற்பட்டு மரித்துவிடுகிறார். ஆனால் நயன்தாரா தைரியமாகப் பார்த்து பரிசை வெல்கிறார்!

நயன்தாரா தைரியம்தான் ஊரறிஞ்ச விஷயமாச்சே!

More articles

Latest article