இளையராஜா
இளையராஜா
 “நிலா அது வானத்து மேலே..   பலானது ஓடத்து மேலே.. ”  என்ற தத்துவப் பாடலைப் பாடிய இசைஞானி மீது நம்ம மக்களுக்கு மயக்கம் கொஞ்சம் அதிகந்தான் போலிருக்கிறது…!

வெள்ளநிவாரண பாராட்டு விழாவிற்கு போன இடத்தில் அந்த விழாவிற்கு தொடர்பில்லாத கேள்வியை ஒரு நிருபர் கேட்டுவிட்டாராம்.

நிருபரின் கேள்வி வேண்டுமானால் அந்த விழாவிற்கு சம்மந்தமில்லாமல் இருக்கலாம்… ஆனால்.. இசைஞானி சினிமா இசையோடு சம்மந்தப்பட்டவர்தான்,,, அதனால்தான் அவருக்கு இந்தப் பெயரும் புகழும் கிடைத்தது. அதை அவர் மறக்கக் கூடாது.

அது தொடர்பாகத்தான் அந்தக் கேள்வி.. சிம்புவும் அனிருத்தும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள்தானே…அவர்கள் தொடர்புடைய பாட்டைப் பற்றித்தானே கேட்கிறார்கள்..
அவரது ஞானம் ஏன் இப்படி குமுறுகிறது???

சிலர் அவர்அரசியல்வாதியல்ல. அவரிடம் இப்படிக் கேள்வி கேட்டிருக்கக் கூடாது என்கிறார்கள். இது என்ன புது விதியாக இருக்கிறது? அவர் ஒரு பப்ளிக் செலிபிரிட்டி.. அவர் வெளியில் வரும் போது அந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ஊடகங்கள் கேட்கத்தான் செய்யும்…அதற்கு நாகரீகமாய் பதில் சொல்லும் பொறுப்பு அவருக்கிருக்கிறது.

இளையராசா செய்தது போல வேறு யாராவது செய்திருந்தால் இவ்வளவு வயசாயிருக்கிறது?? ஆனாலும் பக்குவம் இல்லை என்றிருப்பார்கள்? ஈகோ என்றிருப்பார்கள்…கேள்வி கேட்க சுதந்திரம் இல்லையா? பிடித்தால் பதில் சொல்லட்டும இல்லாவிட்டால் நோ கமெண்ட்ஸ் என்றுசொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே என்றிருப்பார்கள்…

இந்திராகாந்தி அலங்காரம்
இந்திராகாந்தி அலங்காரம்

ஆனால் உல்டாவா நடக்கிறது.. காரணம் இவர்கள் அவரது இசைக்கு அடிமை… இசைக்கு அடிமையாக இருப்பதற்கும் இளையராசாவிற்கு அடிமையாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.. அந்த வித்தியாசம் தெரியாமல்தான் நாம் நாசமாய்ப் போய் கொண்டிருக்கிறோம்.

நாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நபர்கள் தவறு செய்யும் போது உண்மையிலேயே வருத்தம் தான் வரும் … இவர் இப்படி நடந்து கொண்டாரே என்ற கவலை வரவேண்டும்… ஆனால் நாமோ அவர் மீதான மயக்கத்தில் அவர் செய்ததை நியாயப் படுத்திக் கொண்டிருக்கிறோம்..

இது போன்ற அறிவுக்குப் புறம்பான, தனிநபர் மீதான மயக்கம் இந்தச் சமூகம் உருப்படஎன்றைக்குமே வழிவகுக்காது.

இந்திராகாந்தி அலங்காரம் https://www.facebook.com/indiragandhi.alangaram